அஞ்சல் துறை சேவையில் மாற்றம்.. இன்று முதல் பதிவு தபால் கிடையாது.. ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்வு!
சென்னை: பொதுமக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்ற அஞ்சல் துறையானது, தன்னுடைய ஸ்பீட் போஸ்ட் சேவையை வலுப்படுத்துவதற்காகவும், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்காகவும், புதிய அம்சங்களையும், கட்டணத் திருத்தங்களையும் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணமானது இன்று அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. அந்தவகையில் திருத்தப்பட்ட கட்டணம் என்னவென்று பார்ப்போம்.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் அசுரவளர்ச்சியை பெற்ற போதிலும், அஞ்சல் துறையின் சேவை என்றைக்குமே பொதுமக்களுக்கு தேவையுடையதாக உள்ளது... அதிலும், தபால் துறையில் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அஞ்சலகங்கள் அவசியம்
காரணம், பாதுகாப்பான முதலீடு என்பதால் வாடிக்கையாளர்களின் முதலீட்டு தேர்வுகளில் அஞ்சலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.. அதுமட்டுமல்ல, தகவல் பரிமாற்றம், முதலீடு, சேமிப்பு உள்ளிட்டவற்றுடன் ஸ்பீட் போஸ்ட், போன்ற பல்வேறு வகையான சேவைகளை அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. இதன்காரணமாக விரைவு தபால் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
அஞ்சல் துறை - ஆவணங்களுக்கு கட்டணம்
இதுகுறித்து அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு, 19 ரூபாய், 200 கி.மீ., வரை 47 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து, 2,000 கி.மீ., வரை 47 ரூபாய்.
அதே நேரத்தில், 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூரில் 24 ரூபாய், 200 கி.மீ., வரை 59 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 63 ரூபாய், 501 கி.மீ.,ல் இருந்து 1,000 கி.மீ., வரை 68 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 72 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 77 ரூபாய்.
இதற்குமேல், 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூரில் 28 ரூபாய்.
தபால் கட்டணம்
200 கி.மீ.,க்குள் 70 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 75 ரூபாய், 501 கி.மீ., இருந்து 1,000 கி.மீ., வரை 82 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 86 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 93 ரூபாய்.
உரியவரிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடம் தபால் சேர்க்கவும், உரியவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில், தபால் பெற உரியவரை நியமிக்காத நிலையில், ஓ.டி.பி., பெற்று தபால்களை சேர்க்கவும், தனித் தனியாக, 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள், இன்று அக்டோபர், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன" என்று தபால்துறை அறிவித்திருக்கிறது.
ஸ்பீட் போஸ்ட் கட்டணம்
இதில் ஸ்பீட் போஸ்ட் கட்டணமானது, கடைசியாக அக்டோபர் 2012ல் திருத்தப்பட்டது. அதற்கு பிறகு மாற்றப்படவேயில்லை.. இப்போது தொடர்ச்சியான சேவை மேம்பாடுகள், அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் புதிய புத்தாக்கங்களில் முதலீடு செய்வதற்காக, ஸ்பீட் போஸ்ட் (ஆவணங்களுக்கான) கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பீட் போஸ்ட் சேவையை வலுப்படுத்துவதற்காகவும், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்காகவும், திருத்தப்பட்ட இந்த கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications