மனைவி இப்படியுமா? 1700 அடி மலை உச்சியில் தபால் ஊழியர் பண்ண வேலை! 13 நிமிட பதற வைக்கும் கடைசி வீடியோ
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த தபால் துறை ஊழியர் ஒருவர், மகாராஷ்டிராவில் உள்ள 1700 அடி ஆழமுள்ள மலைப்பகுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பு அவர் பதிவு செய்த 13 நிமிட வீடியோவில், அவர் பேசியிருந்த விஷயம், அதற்கு மேல் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.. அப்படி அந்த வீடியோவில் அவர் என்ன பேசினார்?
குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ்சிங் மயூர்சிங் கோஹில், திம்பா.. அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர்.. இவருக்கும் தாராபா சர்வையா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது.

குஜராத் தபால் ஊழியர்
திருமணத்துக்குப் பிறகு 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, செப்டம்பர் 12ம் தேதி தாராபா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கியது. அக்டோபர் 9ம் தேதி விஸ்வராஜ்சிங் நீதிமன்றத்திலும் ஆஜரானார்.
ஆனால், அக்டோபர் 12ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள ஹரிச்சந்திரகாட் மலைப்பகுதியின் கொங்கண்கடா என்ற இடத்தில் விஸ்வராஜ்சிங் உயிரிழந்தார். இந்தப் பகுதி தானே, புனே, அகமதுநகர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளத்தாக்கு சுமார் 1700 அடி ஆழம் கொண்டதாகும்..
1700 அடி மலையுச்சியில் தற்கொலை
மலையுச்சியின் அருகில், விஸ்வராஜ்சிங்கின் பைக்கும், செல்போனும் கிடந்ததை அங்குள்ளவர்கள் பார்த்துபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகமதுநகர் மாவட்டத்தின் ராஜூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினார்கள்..
பள்ளத்தாக்கு மிகவும் ஆழமாக இருந்ததால், அவரது உடலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. பிறகு ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் உடல் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது... இறுதியில் மலை ஏறுவதில் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் சுமார் 24 மணி நேரப் போராட்டத்துக்குப் விஸ்வராஜ்சிங்கின் உடல் மீட்கப்பட்டது.
இதில், உடல் மீட்கப்பட்ட இடம் தானே மாவட்டத்தின் டோகாவாடே காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், அங்கு தற்செயலான மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது... இந்த விசாரணையின்போது, விஸ்வராஜ்சிங்கின் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டபோதுதான், அவர் தற்கொலைக்கு முன்பு ஏற்கனவே ரிக்கார்டு செய்திருந்த வீடியோ குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
13 நிமிட வீடியோவில் அவர் சொன்னது என்ன?
விஸ்வராஜ்சிங் பதிவு செய்த வீடியோவில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலை கொட்டி தீர்த்திருக்கிறாராம்..
"இந்த நவீன காலத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் தன் மீதும் தன்னுடைய குடும்பத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.. என் மீதும், என்னுடைய அம்மா, 16 வயது தம்பி மீதும் அடித்துத் துன்புறுத்தியதாக அபாண்டமாக என் மனைவி பழி போட்டுள்ளார்.. சாதாரண குடும்ப தகராறுகளையெல்லாம், குடும்ப வன்முறையாக மனைவி மாற்றி விட்டார்..
மனைவி சொன்ன பொய் புகார்களை வைத்து வழக்குப் பதிவு செய்யும்போது, உரிய ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளைகூட யாரும் சரி பார்ப்பதில்லை .. பெண்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்கள் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகின்றன..
மொத்தமும் பொய் குற்றச்சாட்டு
தன்னுடைய அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம், என்னுடைய மனைவியை நான் எப்போதுமே தடுத்ததில்லை.. என்னுடைய மாமனாரை நான் சொந்த அப்பா போலவே கருதுகிறேன்.. ஒருபோதும் அவமரியாதையாக நடந்து கொண்டதில்லை.. அதேபோல என்னுடைய மனைவியின் குடும்பத்தினர், நகைகளை நாங்கள் வாங்கி வைத்து கொண்டதாக சொல்கிறார்கள்.. மனைவி வீட்டை விட்டு போகும்போதே, எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு சென்றுவிட்டார்..
ஆனால், என்னுடைய குடும்பத்தினருக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தனர்.. என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் இவர்கள் நிரூபிக்க வேண்டும், இந்த வழக்குகளில் 90 முதல் 92 சதவீதம் வரை பொய்யானவை, என்னுடைய குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றெல்லாம் விஸ்வராஜ்சிங் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பரிதாப கணவர்
இதையடுத்து,. விஸ்வராஜ்சிங்கின் மரணம் தொடர்பாக போலீசார் தற்செயலான மரண அறிக்கையைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் வாக்குமூலங்களைப் பெறுவதுடன், அவர் பதிவு செய்த வீடியோவையும் ஆய்வு செய்ய போகிறார்களாம்.
மலையுச்சியில் ஏறி கணவன் தற்கொலை செய்ததுடன், திருமணமாகி 8 மாதங்களிலேயே இப்படியெல்லாம் கணவன் கொடுமையை அனுபவித்தாரா? என்று இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள்..!!




Click it and Unblock the Notifications
