சென்னைக்குள் வருவோர் கவனத்திற்கு.. பொத்தேரி vs கிளாம்பாக்கம்.. யாருக்கு எது ஈஸியான ரூட்?
சென்னை: சென்னை வரும் மக்கள் கிளாம்பாக்கத்தில் தான் இனி இறங்க வேண்டும். அதேநேரம் ரயில் மூலம் செல்வோர் ஆம்னி பேருந்துகளிலோ அல்லது அரசு பேருந்துகளிலோ செல்வோர் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி எளிதாக தாங்கள் வீட்டிற்கு போக முடியும். அதேநேரம் சில பகுதி மக்களுக்கு கிளாம்பாக்கமே ஈஸியான ரூட் ஆகும். அதனை பார்ப்போம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் பொங்கல் பண்டிகை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கி வந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திய பின்னரே ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முதல் கோயம்பேட்டில் இயக்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்னி பஸ்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இனி செல்லக்கூடாது எனவும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு அங்கேயே பஸ்களை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படியே நேற்று முதல் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.
இந்த சூழலில் சென்னைக்கு வருவோர் எளிதாக சென்னை நகருக்கு போக என்ன வழிகள் இருக்கிறது என்பதை பார்ப்போம். பொதுவாக கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், திநகர், மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சென்டர், சென்னை கோட்டை, கடற்கரை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர், வில்லிவாக்கம், பாடி, பெரம்பூர், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் பயணிகளை , சென்னை பரனூரை தாண்டும் போதே டிரைவர்களிடம் அலர்ட் செய்து பெத்தேரியில் இறங்கிவிடுங்கள்.
பொத்தேரி ரயில் நிலையம் மட்டுமே பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒரே இடத்தில்அதுவும் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே எளிதாக ரயில்களில் ஏறி உங்கள் வீடுகளுக்கு செல்லலாம். இதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் ஆம்னி பேருந்து பயணிகள் பொத்தேரியில் ஏறிக்கொள்ளலாம்.
அதேநேரம் மற்ற மெட்ரோ ரயில்கள் உள்ள கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம், சைதாப்பேட்டை, ஆலந்தூர்,தேனாம்பேட்டை, எல்ஐசி,அண்ணா சாலை உள்ளிட்ட வழித் தடங்களில் செல்வோர், பெத்தேரில் இறங்கி ரயிலில் போய் பரங்கிமலையில் இறங்க வேண்டும். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி போக வேண்டிய இடத்திற்கு போகலாம். இல்லாவிட்டால் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்து பேருந்துகளில் ஏறி எளிதாக போகலாம். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, பாரிஸ்கார்னர், திருவெற்றியூர் வழித்தடங்களில் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
இது தவிர கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை(ஓஎம்ஆர் சாலை), ரேடியல் சால உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ளவர்கள், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, அடையாறு, கோட்டுடூர்பூரம் வழித்தடங்களில் உள்ளவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்வதே சிறப்பானதாக இருக்கும். நேராக கிளாம்பாக்கம் டவுன் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரே பேருந்தில் ஏறி உங்கள் வீடுகளுக்கு சென்றுவிடலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications