கரண்ட் பில் ஜெர்க் போதாதுன்னு.. இப்போ ஒரு யூனிட் ரூ.35-க்கா? தனியாருக்கு போகுதா தமிழக மின்சார துறை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை ஒருபக்கம்.. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கும் விவகாரம் மறுபக்கம் என மின்துறை சர்ச்சையில் சிக்கியுள்ளது... இப்போது மின்வாரியத்தை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது தமிழக மின்துறையில்?

அக்டோபர் மாத மின் தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் அவசரமாக மின்சாரம் வாங்கியதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

TNEB Tamil Nadu Electricity Power Tariff

மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான தேவைக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏலத்தில் சில நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரை விலை கேட்டுள்ளன. மின் தேவையை முன்கூட்டியே கணித்து ஏற்பாடு செய்திருந்தால், இவ்வளவு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக மின்சார வாரியம்

இதில் முக்கியமான பாயிண்ட் என்னவென்றால், முந்தைய திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.11 முதல் ரூ.20 வரை வாங்குவதற்கான ஒப்பந்தம் இருந்ததாக கூறி, அதை தவெக அரசு ரத்து செய்தது. ஆனால், இப்போது அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திராவில் அக்டோபர் மாத தேவைக்கான ஏலம் செப்டம்பர் 9ம் தேதியே நடத்தப்பட்டதாகவும், அங்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.16 முதல் ரூ.20 வரை கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

மின்வெட்டால் மக்கள் அவதி

கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் அடிக்கடி கரண்ட் போனது.. முக்கியமாக மின்வெட்டால் சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். நைட் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் தூக்கமின்றி தவித்தார்கள். கரண்ட் எப்போது வரும் என்று காத்திருந்தவர்கள், ஒருகட்டத்தில் ஆவேசமாகி சாலை மறியல், மின்வாரிய அலுவலக முற்றுகை என எதிர்ப்பை பல ரூபங்களிலும் வெளிப்படுத்தியிருந்தனர்.

வீடுகள் மட்டுமல்லாமல், கடைகள், தொழிற்சாலைகள், விவசாயமும் பாதிக்கப்பட்டன. மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் மின் மோட்டார்கள் உள்ளிட்ட சாதனங்கள் ரிப்பேர் ஆவதாகவிம் நிறைய புகார்கள் எழுந்தன. மின் கட்டணமும் அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தனியார் வசம் போகிறதா மின்வாரியம்?

மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கியதாக சொல்லப்படும் சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், மின்வாரியத்தின் செயல்பாடுகளிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பதாக சிஐடியு உள்ளிட்ட மின் ஊழியர் அமைப்புகள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன..

குறிப்பாக, மின் உற்பத்தி திட்டங்கள், மின் பாதைகள் அமைத்தல், துணை மின் நிலையங்கள், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துதல் போன்ற பணிகளில் தனியார் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம், மின்விநியோக பணிகளும் படிப்படியாக தனியார் நிறுவனங்களிடம் செல்லக்கூடும் என்பதே ஊழியர்களின் பெருத்த பீதியாகும்.. இதனால் எங்கே தங்களுக்கு வேலை போய்விடுமோ, எதிர்காலத்தில் மின்சார விநியோகமும் தனியார் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுமோ என்றெல்லாம் அச்சமும், கவலையும் அவர்களுக்குள் எழுந்துள்ளது.

டெண்டர் - அதிக விலை

இதனிடையே, நவம்பர் முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை மின் தேவையை சமாளிக்க மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், அடுத்த கட்ட கொள்முதல் எப்படி அமையப்போகிறது தெரியவில்லை.

மின்வெட்டை தவிர்க்க கரண்ட் வாங்குவது அவசியம் என்றாலும், இவ்வளவு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? முன்கூட்டியே திட்டமிடுவதில் ஏற்பட்ட சிக்கல் என்ன? அதேநேரம், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சி நடப்பதாக ஊழியர்கள் சொல்லும் புகாருக்கு அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது? இதற்கெல்லாம் தெளிவான விளக்கம் கிடைக்க வேண்டியிருக்கிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+