Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர் பத்திரம்.. வீடு விற்பனை பத்திரப்பதிவில் புதிதாக முளைத்த சிக்கல்.. 2 பத்திரங்கள்? மாற்றம் வருதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு விற்பனையில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.. இதுகுறித்த கோரிக்கையும் பத்திரப்பதிவு துறைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

Power Bond and Can registration of 2 bonds be allowed by the TN Registration Department

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பணிநிறைவு சான்றிதழ்: அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்தது.. அந்தவகையில், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது சமீபத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த முடிவானது, இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது..

முன்பதிவு: இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும், பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்றும் அரசுக்கு கோரிக்கைகளும் வலுத்தன.

இதற்கு பிறகு, பதிவுத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், "அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும். பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமானதடையும் இல்லை" என்று விளக்கம் தரப்பட்டது.

பத்திரப்பதிவு: அந்தவகையில், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகள் விற்பனையின்போது, நிலத்தின் அளவு, மதிப்பு, கட்டடத்தின் அளவு, மதிப்பு அனைத்தும் மொத்தமாக குறிப்பிடப்பட்டு, ஒரே பத்திரமாக பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவையடுத்து, நிலம் மற்றும் கட்டடத்தின் மொத்த மதிப்பில், 9 சதவீத தொகையை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தற்போது இந்த உத்தரவை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், அடுக்குமாடி திட்டங்களுக்கு பொது அதிகாரம் அடிப்படையில், நிலம் வழங்கியவர்களுக்கு, புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின், தென்னக மையத்தின் நிர்வாகி முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

புதிய சிக்கல்: அதில், "பெரும்பாலான அடுக்குமாடி திட்டங்களில், நிலத்தின் உரிமையாளரும், கட்டுமான நிறுவனமும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், பொது அதிகார ஆவணம் வாயிலாக நிலம் பெற்று, தனியார் கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன... ஆனால், வீடு விற்பனையின்போது பத்திரத்தில், கட்டிடத்தின் மதிப்பும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது.

இதில், நில உரிமையாளரின் பெயரில் இருந்து, பிறருக்கு வீடு விற்பனையாவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால், நில உரிமையாளருக்கு அதிக ஆதாயம் கிடைத்துள்ளதாக பதிவாகிறது.

தீர்வு கிடைக்குமா: இந்த சிக்கல் தெரியவந்ததால், புதிதாக பொது அதிகாரம் கொடுக்க, நில உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, நிலத்துக்கு ஒரு பத்திரம், கட்டிடத்துக்கு ஒரு பத்திரம் என்று மொத்தம் 2 பத்திரங்களை பதிவு செய்ய அனுதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புதிய சிக்கலுக்கும் பத்திரப்பதிவு துறை விரைவில் தீர்வு காணும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+