மதுராந்தகத்தில் ஆதவ் பேசும் போதே மின்வெட்டு! முகமே மாறி போன அமைச்சர்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக் கொண்டிருந்த போதே மின்வெட்டு ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் பேசிய போது மின் வெட்டு ஏற்பட்டது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்காக அந்த வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Power cut

அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், கரூரில் விஜய் பிரச்சாரம் செய்த போது சூழ்ச்சி ஏற்பட்டது. அன்று பாதுகாப்பு கொடுத்த அதே காவல்துறை தானே தற்போதும் பாதுகாப்பு கொடுத்தது.

தேர்தல் வெற்றிக்கு பிறகு விஜய் கரூர் சென்ற போது ஏதேனும் பிரச்சனை நடந்ததா, யாருக்காவது ஒருவருக்கு அடிப்பட்டதா, ஏதாவது பைக் விபத்து நடந்ததா, இது எல்லாமே திமுக செய்த சூழ்ச்சி. அதே போலீஸ்தானே இப்போதும் பாதுகாப்பு கொடுத்தது, இதையெல்லாம் மக்கள் திமுகவிடம் கேள்வி கேட்க வேண்டும்.

எத்தனையோ இடங்களில் விஜய்யை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை. இது எங்களுக்கு வலியை கொடுத்துள்ளது. எனவே மதுராந்தகம், தாராபுரத்தில் தலா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆதவ் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா பேசிக் கொண்டிருந்த போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது சலசலப்பு ஏற்பட்டது. உடனே ஆதவ், முகம் மாறிவிட்டது , அந்த சலசலப்பை சமாளித்து ஜென்ரேட்டரை ஆன் செய்யுங்கள் என்றார். மின்வெட்டே இல்லை எந கூறி வரும் அமைச்சர் நிகழ்விலேயே இது போன்று மின் வெட்டு ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆதவ் கூட்டத்தில் மின்வெட்டு என்ற செய்தியை சுட்டிக் காட்டி, "மேற்படி செய்திக் குறிப்பில் உள்ள பகுதி, 33 கி.வோ. ஓரத்தி துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் 11 கி.வோ. மோகல்வாடி மின்பாதை மூலமாகவே மின்வழங்கலைப் பெறுகிறது.

இச்சம்பவம் குறித்து மேற்கொள்ப்பட்ட கள ஆய்வில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மின்விநியோகத்தில் எவ்வித மின்தடையும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், மின்வாரிய மின் விநியோகத்திலிருந்து 'ஜென்செட்' (Genset) மின்வழங்கலுக்கு மாற்றியமைத்த போது, சில விநாடிகள் மட்டுமே தற்காலிக மின்விநியோக இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஆதலால் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது என்ற புகார் முற்றிலும் தவறானது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் தினமும் தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில் கூட மின்வெட்டுக்காக போராட்டம் இல்லாமல் இல்லை.

தினமும் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு போராட்டம் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தஞ்சையில் அமைச்சர் விஸ்வநாதன் குந்தவை நாச்சியார் கல்லூரியில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்த போது திடீரென பவர் கட் நடந்தது.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அரை மணி நேரம் அவர் இருட்டிலேயே பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மாணவிகளுக்கு அவரது பேச்சு ஏதும் கேட்காததால் சலசலப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+