தாம்பரம், பல்லாவரம், தரமணியில் நாளை மறுநாள் பவர் கட்.. சென்னைவாசிகளே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் வரும் திங்கள் அன்று மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ள இடங்களின் விவரங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி நாளை மறுநாள் (23.06.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு ஊரில் நடைபெறுவது வழக்கம். மாதம் ஒரு முறை ஒரு ஊரில் மின்வயர்கள் மாற்றுவது, மின் மாற்றிகளை மாற்றுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

டிரான்ஸ்பார்மர்களில் மற்றும் மின் வழித்தடங்களில் மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல் துண மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.இது பற்றி முதல் நாளே மின்வாரியம் அறிவித்துவிடும்.
உங்கள் ஊரில் இன்று பவர் கட் என்பதை எப்படி அறியலாம்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படும் மின்சார தடை குறித்து https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml இணையதளத்தில் தினமும் அப்டேட் செய்யப்படும் . அதில் உங்கள் ஊரில் நாளை மின் தடை உள்ளதா என்பதை அறியலாம். நாளை மறுநாள் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட உள்ளது.
சென்னையில் பவர் கட்
இது பற்றி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னையில் நாளை மறுநாள் (23.06.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரத்தில் பவர் கட்
தாம்பரம்: எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தினகுமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ, சித்தலபாக்கம் ஜோதி நகர், ஜோதி நகர், சித்தலபாக்கம் சாலை, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
பல்லாவரத்தில் பவர் கட்
பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை ஹவுசிங் போர்டு, டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜி.எச்., நியூ காலனி 13 முதல் 14, 17வது குறுக்குத் தெரு, மல்லிகா நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்.கே.வி.அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர்.
தரமணியில் பவர் கட்
தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் பிளாட், கிரியாஸ் அருகில், தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஷாத்திரிபுரம், பார்க் அவென்யூ ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்" இவ்வாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications