சென்னை மட்டுமில்லை.. இனி தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு இருக்காது.. விஜய் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மின்தடைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முதல்வர் விஜய் புதிய திட்டத்தை செயல்படுத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. கோடை காலத்தில் அதிகப்படியான மின்சார தேவையால் இந்த பிரச்சனை வருவதாக கூறப்படுகிறது.

power-cut-row-cm-vijay-orders-to-set-231-new-power-sub-station-in-tamil-nadu

சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் அடிக்கடி மின்வெட்டு மற்றும் இரவில் நீண்டநேர மின்வெட்டு உள்ளிட்டவற்றால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இது முதல்வர் விஜய் அரசுக்கு தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் மின்தடை பிரச்சனையை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் எரிசக்திதுறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடந்தது. எரிசக்தி துறை மற்றும் தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து முதல்வர் விஜய் விரிவாக ஆய்வு செய்தார்.

அப்போது மாநிலத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை., பழைய மின் சாதனங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்து வரும் மின் நுகர்வு, பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு சேவை முகமைகள் சாலைகளை தோண்டும்போது மின் கேபிள்களுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதங்கள் உள்ளிட்டவற்றால் சென்னை மற்றும் பிற நகரங்களின் பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது என்று முதல்வர் விஜய்யிடம் தெரிவித்தனர்.

அதேபோல் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்க்க அரசு கூடுதலாக 77 ஃபியூஸ்-ஆஃப் கால் (Fuse-Off Call) மையங்கள், 7 புதிய பழுதுநீக்கும் குழுக்கள், 125 மின் சீரமைப்பு வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 நிலத்தடி கேபிள் பழுது கண்டறியும் குழுக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேபோல் தொலைபேசி அழைப்பு அடிப்படையிலான 'மின்னகம்' சேவை மையம் (9498794987) மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வாட்ஸ்அப் அடிப்படையிலான புகார் மேலாண்மை அமைப்பும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக கூறினர்.

அதை கேட்டு கொண்ட விஜய் மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி விஜய், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் 2,275 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ரூ.10,109 கோடி மதிப்பீட்டில் 121 புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலைய அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 231 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான 15,058 மின்வாரியப் பணியாளர்களை நியமிக்க ஆணையிட்டார். அதோடு மின் சாதனப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்தவும், கள அளவிலான கண்காணிப்பை பலப்படுத்தவும் அவர் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரை பொறுத்தவரை, தற்போதுள்ள 125 ரோந்துக் குழுக்களைத் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தவும், புகார்களுக்கு விரைவாக பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இது சாத்தியமாகும் பட்சத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுவது குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், மின்வாரிய தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+