விட்டுக் கொடுத்தது போதும்.. போட்டுக் கொடுப்போம்! ஃபைல்களை தூசி தட்டும் எடப்பாடி! கிலியில் மாஜிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி முதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக விஜய் ஆட்சி அமைத்த பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு மற்ற கட்சிகளை கூட பரிதாபப்பட வைக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் அதிமுகவை விட்டு விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார் என அதிமுக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் சில 'ஃபைல்களை' டெல்லிக்கு அனுப்ப எடப்பாடி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

Edappadi Palaniswami AIADMK TVK

மேலும், தேர்தலில் தோல்வியடைந்த கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் ஏற்கனவே தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். இந்நிலையில், அவர்களைத் தொடர்ந்து மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் அதே தவெகவில் இணையலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது.

அதிமுக

இதனால் அதிமுக பலமாக இருந்ததாக சொல்லப்படும் கொங்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அதன் பலம் வெகுவாக சரிய வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் கட்சிக்குள் இருந்து கொண்டே எடப்பாடிக்கு எதிராக செயல்படும் முன்னாள் அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம், வீரமணி, நத்தம் விஸ்வநாதன் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களின் செயல்பாடுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிரடி நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை தவிர்த்து பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படும் ஆவணங்களை எடப்பாடி பழனிச்சாமி கையில் வைத்திருப்பதாக அதிமுகவில் கிசுகிசுக்கப்படுகிறது. எதற்கும் பின்னால் தேவைப்படும் என எடப்பாடி சேகரித்து வைத்திருந்த சில ஆவணங்களை தற்போது தூசு தட்டி வருகிறாராம்.

ஜெயலலிதா

அதிமுகவின் முன்னால் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா எப்போதும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சில கோப்புகளை கைவசம் வைத்திருப்பார். அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும் சில பைல்களை வைத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் யார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள்? யார் யார் பினாமியாக இருக்கிறார்கள்? உள்ளிட்ட தகவல்களும் எடப்பாடி இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள்

குறிப்பாக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சர்களின் ஆவணங்கள் தான் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த பைல்களை டெல்லிக்கு அனுப்பி அதிமுக மாஜிகளை கண்ட்ரோலில் எடுக்க வேண்டும் என கூறினாராம். ஆனால் மத்திய அரசை பொருத்தவரை விஜய்க்கு எதிராக நேரடியாக மோத தயாராக இல்லை. திமுக நேரடியாக மத்திய அரசை எதிர்த்து நிலையில் விஜய் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார்.

விஜய்

இதனால் மத்திய அரசும் விஜய் தலைமையிலான அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. தேவைப்பட்டால் இடைத்தேர்தல் அல்லது அதற்கு பிறகு விசாரணை அமைப்புகளை களத்தில் இறக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் ஆவணங்களை டெல்லியில் முக்கிய பாஜக தலைகளிடம் எடுத்துச் செல்ல எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம்.

அதிமுக ஆட்சி

அதே நேரத்தில் ஏற்கனவே விலகிச் சென்றவர்கள் தவிர்த்து தற்போது எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் சில தலைவர்கள் அவ்வாறு செய்தால் அதிமுக ஆட்சியில் தான் ஊழல் நடைபெற்றது என திமுகவும் தவெகவும் குற்றம் சாட்டும். எனவே அது போன்று செய்ய வேண்டாம் என தடுத்து வருகிறார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான மனநிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+