இருக்க இடம் கொடுத்தா.. விசிக மீது வெறுப்பில் விஜய்? 2 சீட்டுக்கு துணை முதல்வர் பதவியா? பரபர பனையூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் - திருமாவளவன் தலைமையிலான விசிக ஒரே கூட்டணியில் இருந்தாலும் கடந்த சில தினங்களாக விசிகவினரின் செயல்பாடுகளால் விஜய் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக துணை முதலமைச்சர் பதவி கோரிக்கை, தவெக அரசை வெளிப்படையாக விமர்சிப்பது, ஆதரவு வாபஸ் என அடிக்கடி பேசுவது உள்ளிட்ட விசிகவின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் தங்களுக்கு எதிராக திரும்பி வருவதாக கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாம் 'பனையூர்' தலைமை.

கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட்டது. நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

Vijay TVK VCK Thirumavalavan

தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் இறுதி முடிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. ஆளுங்கட்சியான திமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தவெக

ஆச்சரியம் அளிக்கும் வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ளது. மதிமுக எம்எல்ஏக்கள் திமுக தரப்பிலேயே தஞ்சம் புகுந்து விட்ட நிலையில் வைகோ ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இதில் கம்யூனிஸ்டுகள் தவிர்த்து காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

விசிக

காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை தந்திருக்கும் நிலையில் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என இருவருக்கும் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் இரண்டு அமைச்சரவை பதவி தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விசிகவின் செயல்பாடுகள் கடந்த சில தினங்களாக விஜய் தரப்புக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருமாவளவன்

கூட்டணி அமைவதற்கு நாங்கள் தான் காரணம் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்ற ரீதியில் விடுதலை சிறுத்தைகள் பேசி வருவதை விஜய் விரும்பவில்லை என சொல்கின்றனர். அது மட்டும் இல்லாமல் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவனை போட்டியிட வைத்து அவரை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என விசிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்களாம். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்.

துணை முதல்வர்

"வெறும் இரண்டு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு அமைச்சர் பதவி கொடுத்ததே பெருசு.. இதில் துணை முதலமைச்சர் பதவி வேறு வேண்டுமா?" என கேட்டாராம் பனையூரில் முக்கிய புள்ளி. மேலும், 'பாட்டாளி மக்கள் கட்சி நான்கு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் நிலையில் எப்போது அழைத்தாலும் கூட்டணிக்கு வந்து விடுவார்கள். ஆனால் சமூகநீதி கூட்டணி என்ற அடிப்படையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்து இருக்கிறோம். ஆனால் அமைச்சர் பதவி போதாது என்று துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார்கள்" கட்சியினர் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்று வைத்துக் கொண்டாலும். அதனை எதிர்த்து திருமாவளவன் பேசியிருக்க வேண்டும். ஆனால் கட்சியினரை பேச வைத்து வேடிக்கை பார்ப்பதாகவே விஜய் கருதுகிறார்.

விஜய்

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசிகவினர் நாங்கள் ஆளுங்கட்சி கூட்டணி என சில பல பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் கெட்ட பெயர். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய திருமாவளவன் அமைதியாக இருப்பது, அவரது சம்மதத்தோடு தான் இப்படி நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதனால் விஜய் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்" என்கின்றனர் நம்மிடம் பேசிய பனையூர் வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+