சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் ரத்து.. இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறது என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரத்தை இப்போது பார்ப்போம்.
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் மே 18ம் தேதியான இன்று மின்தடை சென்னையில் எங்கெல்லாம் செய்யப்பட உள்ளது என்பதை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் மே 18ம் தேதியான இன்று தாம்பரம் , போரூர், கேகே நகர், கிண்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும்.
தாம்பரம் பகுதியில் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள்: பல்லாவரம் தெரசா பள்ளி மெயின் ரோடு, பெரியபாளையத்தமன் கோவில் தெரு, மூங்கிலரி பார்ட், முதுஷா தெரு மாடம்பாக்கம் அம்பாள நகர், பாக்கியலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், அலமேல்புரம், சுதர்ஷன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர், கண்டபேரி அன்னை இந்திராநகர், சிட்லபாக்கம் வினோபாஜி நகர், மகேஷ்வரி நகர், ஏர்போர்ட் காலனி, அம்பாள் நகர், நவநீதநகர் ஸ்ரீராம் இரணியமம்மன் கோவில், வண்டலூர், ஓட்டேரி, சிங்காரத்தோட்டம், முக ஸ்டாலின் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் : 33 கேவி விருகம்பாக்கம், 33 கேவி பூந்தமல்லி, 33 கேவி கோவூர், 33 கேவி ஆழ்வார்திருநகர், திருமுடிவாக்கம் சிட்கோ 8வதுமெயிட் ரோடு மற்றும் கிராஸ் ரோடு, வேலாயுதம் நகர், சதீஷ் நகர் பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலயம்பாக்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கேகே நகர்: ஆழ்வார் திருநகர் விஜயநகர், கங்கையம்மன் கோவில் தெரு, திருப்பதி நகர், ஆர்9 போலீஸ் ஸ்டேசன் வளசரவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி: மௌன்ட் ரோடு கனரா வங்கி ஒரு பகுதி, இன்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட் எடி தாமஸ் மொண்ட் வடக்கு பரேட் ரோடு, போலீஸ் குவாட்டர்ஸ், அம்பேத்கர் நகர் மடிப்பாக்கம் ஏரிக்கரை, சதாசிவம் நகர், குளக்கரை தெரு, ராஜ்பவன் வண்டிக்காரன் தெரு ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட கிண்டி, கேகேநகர், போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications