வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் சென்னை மக்களே.. இந்த ஏரியாவில் இன்னைக்கு பவர்கட் இருக்கு! உஷார்
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின் இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, சென்னையில் எந்த இடங்களில் மின் வெட்டு ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அவ்வப்போது பராமரிபபு பணிகள் காரணமாக மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோடை காலங்களில் அதிக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக்ஜாம் புயலால் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக மின் இணைப்புகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு கிடைக்க 3 நாட்கள் வரை ஆனது. வெள்ளம் தேங்காத பகுதிகளில் 12 மணி நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வடசென்னையின் பட்டாளம், திருவொற்றியூர், எண்ணூர், தென்சென்னையை ஒட்டியுள்ள சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடிய 3 நாட்கள் வரை ஆனதால், மின் இணைப்பு கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
அதேபோல மின் இணைப்பு பெட்டிகளில் இருந்த மின்னணு கருவிகள் முழுவதுமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இது தவிர மரங்கள் சாய்ந்ததால் அறுந்து விழுந்த மின் கம்பிகள் போன்றவற்றை மின்சாரத்துறை ஏறத்தாழ முழுவதுமாக சரி செய்திருக்கிறது. இருப்பினும் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று சென்னையில் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
அதாவது, மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக தாம்பரம் பகுதிகளுக்குள்பட்ட கடப்பேரி லட்சுமிபுரம், பிள்ளையாா் கோவில் 1 முதல் 3-ஆவது தெரு வரை, நியூ தெரு, சந்திரன் நகா், நாகப்பா நகா், சி.எல்.சி. ஒா்க்ஸ் சாலை, நியூ காலனி 1 முதல் 6-ஆவது பிரதான சாலை,11 முதல் 18-ஆவது குறுக்குத் தெரு, மும்மூா்த்தி நகா், அன்னை இந்திரா நகா், ஜி.எஸ்.டி.சாலை (பாண்ட்ஸ் முதல் காசநோய் மருத்துவமனை வரை), உமையாள்புரம், அம்பேத்கா் நகா், சோழவரம் நகா், நவமணி தெரு, துா்கா நகா் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வாரியம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்திருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications