மேஜர் அலர்ட்! சென்னை, தாம்பரத்தில் இன்று மின் விநியோகம் இருக்காது.. 2 மணி வரை இங்கெல்லாம் பவர் கட்!
சென்னை: சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களிலும் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிகளுக்காகக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை நகரில் சில முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (நவம்பர் 14), சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. டி.எச். சாலை, ஜி.ஏ. சாலை, ஆர்.கே. நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, தண்டையார்பேட்டை பகுதி, சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ். நாயுடு தெரு மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (நவம்பர் 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம் பகுதிக்குட்பட்ட ராதாநகர், கண்ணன் நகர், சஞ்சய் காந்தி நகர், சாந்தி நகர், கணபதிபுரம், சர்ச் ரோடு, பஞ்சாயத்து மார்க்கெட் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி துவாக்குடி பகுதி, சிவகங்கை மதகுபட்டி பகுதி, கரூர் மேட்டுப்பட்டி பகுதி, அரியலூர் மாவட்டம் கூத்தூர் பகுதி, சேலம் நங்கவல்லி பகுதி, தூத்துக்குடி கடற்கரை சாலை பகுதிகளில் இன்று மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை வரை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications