திடீர் மின்தடை.. இருளில் மூழ்கிய சென்னை! என்ன காரணம்? எப்போது மின்சாரம் சீராகும்?
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி அளவில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை உட்பட பல பகுதிகளிலும் மின்சாரம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
மழையோ, பலத்த காற்றோ இல்லாத நிலையில் திடீரென சென்னை நகரமே இருளில் மூழ்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மின் வாரிய புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில், மின் துண்டிப்புக்கான காரணம் தெரியவந்துள்ளது.
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில், அதாவது அடுத்த 30 நிமிடங்களுக்குள் சென்னையில் மின் விநியோகம் சீராகும் என தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications