தாம்பரம், கேகேநகர், திருவான்மியூர், கிண்டி உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை
சென்னை: சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களிலும் மின்தடை என்பது பராமரிப்பு பணிக்காக ஏற்படுத்தப்படும். சில கிராமங்களில் சனிக்கிழமையும், சில ஊர்களில் புதன்கிழமையும் மின்தடை ஏற்படும். சில ஊர்களில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி என மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக மின்தடை ஏற்படுத்தப்படுவது நடக்கிறது.

சென்னை மற்றும் தாம்பரம் தவிர மற்ற பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதிகபட்சம்) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வழங்கப்படும். ஆனால் சென்னை தாம்பரம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். மின்பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்படும். அந்த வகையில் இன்று பிப்ரவரி 9ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: மாடம்பாக்கம் ஆனந்தா நகர், பார்க் தெரு, சுசிலா நகர், பாலாஜி நகர், அன்பு நகர், வேங்கைவாசல் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு,ஆஞ்சநேயர் கோவில் தெரு, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், கண்ணதாசன் அவென்யு பள்ளிக்கரணை காகிதபுரம், எஸ்.கொளத்தூர், பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பவானி தெரு, வெட்டர் லேன், ஆபிசர்ஸ் லேன், நியூ சந்தை ரோடு பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர் , ஏரிக்கரை ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ரங்கநாதபுரம், புதுநகர், மசூதி தெரு பல்லாவரம் ராஜாஜி நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர்,கணபதி நகர், சரோஜினி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையாறு: திருவான்மியூர் காமராஜர் நகர் 1 முதல் 3 வது மேற்கு தெரு, மேற்கு அவென்யு, காமராஜர் நகர் 1 வது மெயின் ரோடு, ரங்கநாதபுரம், பெரியார் நகர், வள்ளுவர் நகர் பெருங்குடி உத்தண்டி, நீலாங்கரை, வைத்தியலிங்கம் 1வது குறுக்கு தெரு முதல் 3 வது குறுக்குத் தெரு வரை, நியூ கணேஷ் 1 வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜேந்திரன் நகர், 1 வது தெரு முதல் 10 வது தெரு வரை, கதிரவன் சாலை, நாராயணன் பள்ளி, ஈ.சி.ஆர் காவல் நிலையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் .
ஐ.டி. காரிடர்: வெங்கடேஸ்வரா நகர் 1 வது மெயின் ரோடு, 10 வது தெரு, பாண்டியர் நகர், அறிஞர் அண்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: ராமபுரம் முகலிவாக்கம், லலிதாம்பாள் நகர், சாந்தி நகர், ஐயப்பன் கோவில், நந்தம்பாக்கம், கோலப்பாக்கம் ஸ்ரீ ராம் கார்டன், இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெல் நகர், தர்மராஜபுரம், சி.ஆர். ஆர் புரம், எல்& டி காலனி, எம்.ஜி ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே. நகர்: ராமசாமி சாலை ராஜமன்னார் சாலை, லட்சமணசாமி சாலை, ஆர். கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி. ராஜன் சாலை, அசோக் நகர் 1,9 மற்றும் 11 வது அவென்யு, 80 அடி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்: காவனூர் ஆர்.ஈ. நகர், சிறுகளத்தூர், சரஸ்வதி நகர், கலதிபேட், மணிமங்களம் சாலை, பெரியார் நகர், புதுப்பேடு ராமபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2 முதல் 3 வது மெயின் ரோடு வரை, வெங்கடேஸ்வரா 3,11,12,7 வது தெரு வரை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்: மேனாம்பேடு ஓரகடம், எஸ்.வி. நகர், காந்தி மெயின் ரோடு மற்றும் பசும்பொன் சாலை.
செங்குன்றம்: சோத்துபெரும்பேடு காரனோடை, ஆத்தூர், தேவநேரி, கம்மார்பாளையம், கே.வி.டி. அவென்யு, சோழிப்பாளையம், பெரிய காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.












Click it and Unblock the Notifications