TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் வியூகங்களை வகுக்கிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். விஜய்யின் TVK கட்சிக்கு எதிராக AVK என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதகாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும், TVK - AVK ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் முதல் ஆக்சன் ஹீரோக்கள் வரை பலரும் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் தவெக கட்சி மூலம் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். நகைச்சுவை நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் ஏராளமான மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகியுள்ளார். பவர் ஸ்டாரும் அரசியலில் பல ரவுண்டுகள் அடித்துள்ளார். தமாகா, பாஜக, குடியரசு கட்சிகளில் அங்கம் வகித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு திமுக ஆதரவு நிலைப்பாட்டில் அவர் இருந்தார்.

புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்
"நடிகர்களாக நாங்கள் அண்ணன் தம்பியாக இருப்போம். ஆனால் மக்களுக்கான நல்லாட்சியை தருவது திமுகதான். தற்போது நடைபெறும் நல்லாட்சி தொடர வேண்டும். திமுக ஆட்சியில் மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனர். அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான்" என்று பவர் ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் தற்போது விஜய்யின் தவெகவுக்கு எதிராக புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
விஜய் தான் எனக்கு போட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், "அரசியலில் எனக்கு போட்டி நடிகர் விஜய் தான். எங்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே. அவர் TVK. நான் AVK. AVK என்றால் அண்ணா வளர்ச்சி கழகம். இந்த கட்சியை நான் விரைவில் ஆரம்பிக்க போகிறேன். கட்சி தொடக்க விழாவிற்கு அனைவரையும் அழைப்பேன். எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் குழந்தை பிறந்து பெயர் வைப்பது போல கட்சிக்கு பெயர் வைத்துள்ளேன். எப்படியும் இந்த தேர்தலில் இல்லாவிடினும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்.
திமுகவுக்கு தான் ஆதரவு
இனிதான் தேர்தல் ஆணையத்தில் எல்லாம் பதிவு செய்ய வேண்டும். நிறைய வேலைகள் இருக்கின்றன. இருந்தாலும் கட்சி தொடங்குவதை முன்கூட்டியே சொல்கிறேன். விஜய்க்கும், பவர்ஸ்டாருக்கும் தான் போட்டி. எங்கள் வியூகங்கள், திட்டங்கள் குறித்து இனிதான் யோசிக்க வேண்டும். இந்த தேர்தலில் என்னுடைய ஆதரவு திமுகவுக்கு தான். ஸ்டாலின் தான் ஒரு மீண்டும் முதலமைச்சராவார்" என்றார். விஜய்க்கு எதிராக பவர் ஸ்டார் சீனிவாசன் அரசியலில் குதித்திருப்பது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications