அரசியலில் ரீ-என்ட்ரி கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன்! இந்த கட்சியிலயா சேர்ந்துட்டாரு? வெளியான தகவல்
சென்னை: பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் பாரிவேந்தர் பச்சமுத்துவின் ஐஜேகே கட்சியில் இணைந்து இருக்கிறார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று கட்சியில் இணைந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே அவர் பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகி காமெடி நடிகனாக மாறியவர் பவர் ஸ்டார் சீனிவாசன். மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரான அவர் மருத்துவர் என்றும் தன்னைக் கூறிக் கொண்டது உண்டு.

லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் நடித்த நிலையில், சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒன்பதுல குரு, ஐ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். பவர் ஸ்டார் என்று அடைமொழியோடு சூப்பர் ஸ்டாருக்கு சவால் விட்டவர். இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்பின்றி இருந்த அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவர் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அரசியல் கட்சியில் மீண்டும் இணைந்து இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

பிரபல தொழிலதிபரும் முன்னாள் எம்பியும் ஆன பாரிவேந்தர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்து இருக்கிறார் பவர்ஸ்டார். தற்போது அந்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அரசியல் கட்சியில் பயணித்தவர் தான் சீனிவாசன். பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த அவர், அதன் பிறகு வெளியேறினார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக இந்திய ஜனநாயக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி இருந்தது. இதற்கிடையே அந்த கட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் இணைந்தார். அவர் ஏற்கனவே பாஜகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐஜேகேவில் இணைந்த உடனேயே அவருக்கு அகில இந்திய அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications