காலை 9 மணி டூ மதியம் 2 மணி வரை.. சென்னையில் இன்று மின்தடை இடங்கள் இதுதான்! பட்டியல் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று (ஜுலை 18, வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கேகே நகர், போரூர், எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, அடையார் உள்பட 8 முக்கிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 18.07.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

chennai eb power cut

இதனால் சென்னையில் கேகேநகர், போரூர், அசோக் நகர், பொன்னேரி, எழும்பூர், அம்பத்தூர், ஐடி கேரிடர், அடையார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கேகே நகர்: அசோக் நகரின் ஒரு பகுதி, கேகே நகரின் ஒரு பகுதி, வடபழனியின் ஒரு பகுதி, பிடி ராஜன் சாலை, எஸ்எஸ்பி நகர், வெங்கடேஷ்புரம் 15வது செக்டர் அழகர் பெருமாள் கோவில் தெரு, எல்லை முத்தம்மன் கோவில் தெரு, அருணா காலனி, பேபி காலனி, விஜயா தெரு, அசோக் நகர் 77 வது தெரு முதல் 92வது தெரு, காமாராஜ் தெரு 16வது அவென்யு முதல் 19வது அவென்யு வரை, 1வது அவென்யு முதல் 4வது அவென்யு வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

அதேபோல் சர்வமங்களா காலனி, அனுக்ரஹா காலனி, சுவுந்தரபாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1வது தெரு முதல் 9 வது தெரு வரை, புதூர் 11வது தெரு முதல் 14வது தெரு வரை, புதூர் 34வது தெரு முதல் 44வது தெரு வரை, ஒட்டகபாளையம் 1வது தெரு முதல் 13வது தெரு வரை, சிவலிங்க புரம், பொப்லி ராஜ சாலை, ஏபி பட்டூர் சாலை, கலிங்கா கலானி, பன்னீர் செல்வம் சாலை, பாலசுப்பிரமணியம் சாலை, 240 எல்ஐசி காலனி, 6வது அவென்யு முதல் 9 வது அவென்யு வரை, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட இருக்கிறது.

போரூர் - பொன்னேரி: போரூர் பகுதியை பொறுத்தமட்டில் தண்டலம் மெயின் ரோடு, கோவூர், மேனகா நகர், மதரா அவென்யு, டிவிஎஸ் கார்டன், ஆறுமுகம் நகர், ஜோசப் காலேஜ், பொன்னேரியை எடுத்து கொண்டால் தெருவாய் கண்டிகை, தெருவாய்கண்டிகை சி்பகாட், கோபால் ரெட்டி கண்டிகை, பொல்லானூர், புதுநகர்,கரடிபுதூர், புதூர், என்எம் கண்டிகை, கண்ணகோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரகாரம், தணிபூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா உள்ளிட்ட இடங்களில் இன்று ‛பவர் கட்' ஏற்படும்.

எழும்பூர்: இவிகே சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் பகுதி மற்றம் பூங்காநகர் பகுதி, வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆராமுதன் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின் தடை ஏற்படும்.

அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், கஸ்தூர் நகர், மெட்ரோ சிட்டி பேஸ் 1, அக்ரஹாரம், டிஐ சைக்கிள், அம்பத்தூர் ஒடி வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம், ஒரகடம், வெங்கடேஷ்வரா நகர், காந்தி மெயின் ரோடு, எகே அம்மன் நகர், பரிதிவாக்கம், சந்திரசேகரா புரம், திருமுல்லைவாயல், சிடிஎச் ரோடு, விநாயக நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

ஆவடி: ரெட்ஹில்ஸ், கொசப்பூர், விளாங்காடுபாக்கம், அழிங்சிவாக்கம், வடகரை பகுதி, கோட்டூர், புழல், காவாங்கரை, ஜிஎறான்டி சாலை, எம்எச் சாலை, எஸ்எஸ் பாபா நகர், தண்டேங்காழினி, குருசாந்தி நகர், அமதி, புதுக்குப்பம், வணிச்சத்திரம், காஞ்சி காமகோடி நகர், கன்னிப்புரம், ராமக்கொடி, புதுக்குப்பம், வீராபுரம், சிட்கோ, கொள்ளுமேடு, பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், வெள்ளனூர், கிருஷ்ணா கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

ஐடி காரிடார்: டைடல் பார்க், எஸ்டிபிஐ, எம்ஜிஆர் நகர், எம்ஜி ரோடு, விஎஸ்ஐ எஸ்டேட், ஆர்எம் இசட் 1, பாஸ்டிக் சொசைட்டி, டிடிஐ ஜெயந்தி, மேற்கு அவென்யு, தரமணி பஸ் நிலையம், டபில்யூபிடி , ஆர்எம் இசட் 2, பயோ டைசால், சிஎம்ஆர்எல், தரமணி பகுதி, கணகம், பெரியார் நகர், திருவான்மியூர் பகுதி, இந்தி நகர் பகுதி, எம்ஜிார் நகர், எஸ்ஆர்பி டூல்ஸ், வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட், 100 அடி ரோடு பகுதி, அண்ணா நகர், சிஎஸ்ஐஆர் ரோடு, ஆர்எம் இசட், மில்லினியம், கந்தன் சாவடி, சிபிடி பகுதி, அசன்டாஸ், காந்திநகர், அடையார் பகுதி, ஹிரா நந்தினி 1,2, ஸ்ரீராம் நகர், பஞ்சாயத்து ரோடு, காணாத்தூர், இமாமி, முட்டுக்காடு, ஹிராநந்தினி குடியிருப்பு, ரோடியன்ஸ் குடியிருப்பு, ஒலிம்பியா குடியிருப்பு, ஒஎம்ஆர் ரோடு, நாவலூர், விஜயாகணபதி நகர், ஏகாட்டூர் வில்லேஜ், காணாத்தூர் வில்லேஜ், படூர் பஞ்சாயத்து கோவலம் பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது.

அடையார்: கண்ணப்பன் நகர் 1வது 2வது மெயின் ரோடு, எஜிஎஸ் காலனி 2வது 3வது குறுக்கு தெரு, ஸ்ரீராம் அவென்யு 1வது குறுக்கு தெரு மதல் 4வது குறுக்கு தெரு வரை, நாட்கோ காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு, சுவாமி நாத நகர் 1வது 2வது லிங்க் தெரு, சுப்பிரமணியன் தெரு, இசிஆரின் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+