சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது.. உங்கள் ஏரியா இருக்கா? இதோ லிஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (ஜுன் 29) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDGO) சார்பில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மின்வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (ஜுன் 29ம் தேதி) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 29.05.2024 (அதாவது இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை 33/11KV மதுரவாயல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அஷ்டலஷ்மி நகர் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் (CMRL) திட்டப்பணிக்காக 110 கி.வோ. உயர் அழுத்த மின் பாதை மாற்று வழி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணியின் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணிக்கு நிறுத்தப்படும். மதியம் 02.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அதன்படி (11kv அஷ்டலஷ்மி நகர்) கணேஷ் நகர், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகர் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்கியலட்சுமி நகர், ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல் (11kv ஆலப்பாக்கம்) ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சுந்தர் நகர், கோவிந்தப்பநாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மகாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய பணிகளை இன்று காலை 9 மணிக்குள்ளேயே முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications