சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 டூ மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது.. பெரிய லிஸ்ட் வெளியீடு
சென்னை: பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கேகே நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று (புதன்கிழமை) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இந்த பணியின் காரணமாக இன்று பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. சென்னையில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ள இடங்களின் பட்டியலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDGO) சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையாார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கேகே நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் ராமரிப்புபணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ஏரியா வாரியாக மின்சாரம் தடைப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:
போரூர்: கெருகம்பாக்கம், மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், திருமுடிவாக்கம், சிட்கோ, ஐயப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம், கோவூர், குன்றத்தூர் மெயின் ரோடு, மணப்பாக்கம், மதானந்தபுரம், குன்றத்தூர் ரோடு ஒரு பகுதி, சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு, ராமாபுரம், மங்களா நகர், அம்பாள் நகர், போரூர் ஒருபகுதி, மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, பெரியார் நகர், காவனூர், சிறுகளத்தூர், கெளுத்திபே்டடை, நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகர், முடிச்சூர், நடுவீரப்பட்டு, போலீஸ் குடியிருப்பு, பூத்தபேடு மெயின் ரோடு தாங்கள் தெரு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அடையார்: பெசன்ட்நகர், வால்மீகி நகர் கொட்டிவாக்கம், கொட்டிவாக்கம் கப்பம் ரோடு, பரிசியன் கல்லூர், காந்தி நகர், 12வது மற்றும் 40வது ஹவுசிங் போர்டு வரை, சவுத் லாக் தெர, செல்லப்ப தோட்டம், பாண்டிச்சேரி தெர, வரதாபுரம், துலுக்கானத்தம்ன் தெரு, கருணாநிதி 1 முதல் 2வது தெர வரை, புதிய தெர, ரங்கராஜபுரம், கோட்டூர்புரம், ரங்கராஜபுரம் 1 முதல் 6வது தெரு வரை, வடக்கு மடா தெரு, கோவில் அவென்யூ, கிழக்கு மடா தெரு, மேற்கு மாட தெரு, ராம் நகர் 1 முதல் 7 வது தெரு வரை, ராம் நகர், பைாபாஸ் மெயின் ரோடு, அக்ஷயம் ஹோட்டல் முதல் மஹேந்திரா ேஷாரூம் வரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
பல்லாவரம்: கடப்பேரி, ஜிஎஸ்டி ரோடு, பார்வதி ஹாஸ்பிட்டல், கட்லாஞ்சாவடி, நேரு நகர், புதிய காலனி 15 முதல் 16வது தெரு வரை, ஜிஎச், பிஎஸ்என்எல், வெங்கட்ராமர் நகர், ராஜா கீழ்பாக்கம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பிபிஆர், புவனேஸ்வரி நகர், திருநீர்மலை, மெப்ஸ், தேரடி தெரு, கிழக்கு மாடதெரு, தெற்கு மாடதெரு, குளக்கரை சாலை, விஜிஎன் மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒயிலியம்மன் கோவில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, தங்கவேல் தெரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
சோழிங்கநல்லூர்: கேமடவாக்கம், பெரும்பாக்கம், நேசமணி நகர், நுக்கம்பாளையம் மெயின் ரோடு, ஆர்சிபிளாசம், மல்லிஸ், நேகமணி நகர், வரதாபுரம், காசாகிரண்ட் வில்லா, கோவிலம்பாககம், பள்ளிக்கரணை, காமகோடி நகர், மேற்கு அண்ணா நகர், பள்ளிக்கரணை ஏரியா பகுதி, எஸ் கொளத்தூர், விடுதலை நகர், 200 அடி ரேடியல் ரோடு, விநாயகபுரம், மகாலியம்மன் கோவில், சித்தாலப்பாக்கம், டிஎன்எச்பி காலனி, மணப்பாக்கம் மெின் ரோடு, வள்ளுவர் நகர் உள்பட அதனை சுற்றிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
தாம்பரம்: எம்ஐடி ராதாநகர் மெயின் ரோடு, ஸ்டேஷன் ரோடு, வீரபத்திரன் தெரு, ராஜாஜி தெரு, காமராஜ் தெரு, கட்டபொம்மன் தெரு, பஷ்யம் தெரு, பாரதியார் தெரு, டாக்டர்ஸ் காலனி, காந்தி நகர், நேருந நகர், ராதாநகர், நியூ காலனி, பழைய ஹஷ்தினாபுரம் ரோடு, சங்கர்லால் ஜெயின் தெரு, படேல் தெரு, ஆர்பி ரோடு, மெ்ஐடி கங்கையம்மன் கோவில், ஸ்ரீராம் ஸ்டாண்டர்ட், பெருங்களத்தூர், காந்தி ரோடு, ராஜாஜி நகர், செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
கிண்டி: ராமபுரம், சுபஸ்ரீ, விவி கோவில் தெரு, ஏஜிஎஸ் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், செல்வலட்சுமி தோட்டம், பிருந்தாவன் நகர், ஆர்ஜிஎல் முழுவதும், கணேஷ் பில்டர்ஸ், ராம்நகர், மடிப்பாக்கம், கண்ணன் நகர், நங்கநல்லூர், மேடவாக்கம் மெயின் ரோடு, சோலையப்பன் நகர், குபேரன் நகர், பெருமாள் நகர், முவரசன்பேட்டையின் ஒரு பகுதி, ரகவா நகரின் ஒருபகுதி மற்றும் அதனை சுற்றியி இடங்களில் மின்வினியோகம் என்பது இருக்காது.
கேகே நகர் - வியாசர்பாடி: விருகம்பாக்கம், இளங்கோ நகர் தெற்கு தெரு, வாயுபுத்திரா தெரு, பாலாம்பாள் தெரு, தாங்கல் தெரு, ரெட்டி தெரு, கிருஷ்ணா நகர், ஏவிஎம் காலனி, யாதவால் தெரு, பள்ளி தெரு, கனகச்சத்திரம், மாதவரம், லெதர் எஸ்டேட், பொன்னியம்மன் மேடு, புனித அன்னீஸ் பள்ளி மற்றும் கல்லூரி, ஜிஎன்டி ரோடு, தட்டாங்குளம் ரோடு, பெரிய சாலை பகுதி, கனகச்சத்திரம் மெயின் ரோடு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆவடி - எழும்பூர்: திருமுல்லைவாயல், கொடுவள்ளி, மாரைல் கண்டிகை, சேத்துப்பாக்கம், கருவாயல், காரணி, அம்மணபாக்கம், ராமாபுரம், எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கிளப் ரோடு, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்எஸ் நகர், சேத்துப்பட்டு பகுதி, பிசிஓ ரோடு, கெங்கு ரெட்டி ரோடு, பூசாலை கெங்கு ரெட்டி ரோடு ஹால்ஸ் ரோடு, காந்தி இர்வின் ரோடு, கென்னட் லேன் உள்பட பிற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications