சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 டூ மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.. இதோ லிஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (ஜுன் 7) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சில இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDGO) சார்பில் மாநிலம் முழுவதும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அவ்வப்போது மின்வாரியம் சார்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

பராமரிப்பு பணிக்கு என்று ஒவ்வொரு மின்வாரியத்திலும் மாதத்தில் ஒருநாள் மின்சாரம் நிறுத்தப்படும் வழக்கம் உள்ளது. பராமரிப்பு பணிக்கு பிறகு மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்படும். இப்படி பராமரிப்பு பணிக்காக ஏற்படுத்தப்படும் மின்தடை பற்றி முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில் இன்று (ஜுன் 7 ம் தேதி) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 07.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை 33/11 கி.வோ. திருவான்மியூர் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கி.வோ இந்திரா நகர் மின்னூட்டியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்திரா நகரில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 03.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி எல்.பி. ரோடு 1 பகுதி, காமராஜ் நகர் 6வது தெரு முதல் 12வது கிழக்கு தெரு, காமராஜ் அவென்யூ, எல்.பி. ரோடு ஒலிம்பியா அப்பார்ட்மெண்ட்ஸ், எல்.பி. ரோடு சூரஜ் மற்றும் சந்த் டவர்ஸ், எல்.பி. ரோடு ரமணியம் சஞ்ஜீவினி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்வாரியம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடிப்பது நல்லது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications