சென்னையில் 86 இடங்களில் இன்று மின்தடை.. வெளியான லிஸ்ட் உங்க ஏரியா இருக்கா பாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய 86 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க அவ்வப்போது மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

power cut eb

சென்னையில் 08.10.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு முனை சாலை, டிஎச் ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மய்யா மேஸ்திரி தெரு, புச்சம்பமாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

மேலும் பூண்டி தங்கம்மாள் தெரு, ஏஇ கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத்தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்பிடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

ஈஞ்சம்பாக்கம்: 1வது அவென்யூ வெட்டுவான்கணி, அக்கரை கிராமம், அல்லிகுளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ்,பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்திவேந்தன் சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்ளேவ், காப்பர் பீச் ரோடு, டாக்டர் நஞ்சுண்டாராவ் சாலை, ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கனி இணைப்பு சாலை, கங்கையம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

குணால் கார்டன், அனுமன் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4வது தெரு, கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்ஜி அவென்யூ, மரியக்காயர் நகர், நயினார் குப்பம், உத்தரண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் மின் சேவை இருக்காது.

அதேபோல் என்ஆர்ஐ லே - அவுட், விஜிபி லே-அவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு & பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிரஸ்டீஜ் மற்றும் மந்திரி, ராஜன் நகர் 1வது & 2வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிஃப், சீ செல் அவென்யூ, சீசோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1வது & 2வது தெரு, டிவிஎஸ் அவென்யூ, ஆசிரியர்கள் காலனி, திருவள்ளுவர் சாலை ,தாமஸ் அவென்யூ, விஓசி தெரு, விமலா கார்டன், ஜூகு பீச் என மேற்கூறிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+