ஐந்து மணி நேரம் மின்சாரம் இருக்காது..சென்னையில் நாளை மறுநாள் எங்கெல்லாம் பவர்கட்.. விவரம்
சென்னை: சென்னையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் (29.09.2023 வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், வியசார்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் மின் விநியோகம் அளிக்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று மின் தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் எவை எவை என்பதை இப்போது பார்ப்போம்.
கிண்டி: தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை காந்தி தெரு, பாரதியார் தெரு, திருமலை தெரு, செந்தில் ஆண்டவர் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி 7 மற்றும் 8வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: டி.ஐ. சைக்கிள் வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம் மேனாம்பேடு ஒரகடம், காந்தி மெயின் ரோடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர், புதூர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வியசார்பாடி: மாத்தூர் மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் காலேஜ் ரோடு, பாயசம்பாக்கம், தனலட்சுமி நகர், எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்புகள், காமராஜ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை மிலாடி நபி, அரசு விடுமுறை தினம் என்பதால் மின்வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் நாளை சென்னையில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications