சென்னையில் இன்று ஐந்து மணி நேரம் மின்சாரம் இருக்காது. எங்கெல்லாம் பவர்கட்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் இன்று கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் (29.09.2023 வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், வியசார்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் மின் விநியோகம் அளிக்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று மின் தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் எவை எவை என்பதை இப்போது பார்ப்போம்.
கிண்டி: தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை காந்தி தெரு, பாரதியார் தெரு, திருமலை தெரு, செந்தில் ஆண்டவர் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி 7 மற்றும் 8வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: டி.ஐ. சைக்கிள் வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம் மேனாம்பேடு ஒரகடம், காந்தி மெயின் ரோடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர், புதூர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வியசார்பாடி: மாத்தூர் மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் காலேஜ் ரோடு, பாயசம்பாக்கம், தனலட்சுமி நகர், எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்புகள், காமராஜ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications