சென்னை மக்களே கவனம்.. நாளை - நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு.. இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 2 நாட்களும் மின்சப்ளை இருக்காது. இதற்கான அறிவிப்பு மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாதந்தோறும் ஒருநாள் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையில் நாளை (ஜூலை 14) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 15) ஆகிய நாட்களில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

அதன்படி இந்த 2 நாட்களும் காலை 9 மணி முதல் மதியம் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
சென்னையில் ஜூலை 14 மற்றும் ஜூலை 15 ஆகிய 2 நாட்கள் பாரமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொத்தம் 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதன்படி நாளை (ஜூலை 14) ம் தேதி பெசன்ட் நகர் ஏரியாவை எடுத்து கொண்டால் மாளவியா 1வது அவென்யூ முதல் சிவகாமி புரம் 4வது தெரு வரை, கங்கை அம்மன் கோவில் தெரு, எல்ஐசி காலனி, சுப்பிரமணியம் காலனி, மாளவியா அவென்யூ 1வது முதல் 3வது தெரு வைரை, எம்ஜி ரோடு, ஆர்கே நகர் மெயின்ரோடு, 2வது முதல் 3வது கிராஸ் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் (ஜூலை 15) பள்ளிக்கரணையை எடுத்து கொண்டால் காமகோடி நகர், ஐஐடி காலனி, ராஜகீழ்பாக்கத்தை எடுத்து கொண்டால் எஸ்எஸ் கேம்ப் ரோடு, சேலையூர், வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு மற்றும் விரிவாக்கம், ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர், அவ்வை நகர், எம்எஸ்கே நகர், கண்ணன் நகர், ஐஓபி காலனி, முத்தாளம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களின் மின் சப்ளை இருக்காது.
மேலும் பெரும்பாக்கத்தை எடுத்து கொண்டால் மேடவாக்கம், கவுரிவாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், பார்ம் கார்டன், காயத்ரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இதுதவிர முடிச்சூரை எடுத்து கொண்டால் திருமுடிவாக்கம், வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், பிடிசி குவார்ட்டர்ஸ், சரஸ்வதி நகர், பாஸ்யம் கோபாலா கிருஷ்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
அதேபோல் செல்தி்ல நகர், நடுவீரபட்டு, பூதண்டலம் பஞ்சாயத்து, எட்டயபுரம், ஆர்ஆர்டி மற்றும் தர்ஷன் கார்டன், அசோக் நந்தவனம், காயத்ரி மேகா நகர், பிங்க் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் வரும் 15 ம் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications