சென்னை மக்களே.. இன்று இங்கெல்லாம் மின் விநியோகம் இருக்காது.. மின்சார வாரியம் அறிவிப்பு
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், தண்டையார்பேட்டை, அடையார் ஆகிய பகுதிகளில் (09.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளை சென்னையில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். பொதுவாக தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் சென்னை மற்றும் தாம்பரத்தில் சில பகுதியில் மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி இன்று எங்கெல்லாம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்பது குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர் சித்தாலப்பாக்கம் மேடவாக்கம் ரைஸ்மில் ரோடு. ஜெயச்சந்திரன் நகர். அண்ணாசாலை, ஜல்லடியான்பேட்டை, பத்மாவதி நகர் ராதா நகர் நியூ காலனி 1 மற்றும் 2 வது குறுக்கு தெரு, சாஸ்திரி காலனி, சோழவர் நகர், நேரு தெரு, நவமணி தெரு, கேஸ் கம்பெனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: தில்லை கங்கா நகர் நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ. ஜீவன் நகர். இந்திரா நகர். பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்படும் .
கே.கே.நகர்: கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெரு மற்றும் சூளைமேடு நெடுஞ்சாலையில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும்
தண்டையார்பேட்டை : மணலி கலைஞர் நகர். சி.பி.சி.எல் நகர். பாடசாலை, வையக்காடு. 200 அடி மணலி ரோடு, சடையன்குப்பம், பர்மா நகர், எலந்தணூர், பென்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ. ஆண்டார்குப்பம், வி.பி. நகர், சின்ன மத்தூர் சாலை, மூலச்சத்திரம், பச்சையப்பன் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும்.
அடையார்: கொட்டிவாக்கம் காமராஜ் சாலை, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கந்தசாமி நகர் 1 முதல் 5வது தெரு வரை. மணியம்மை தெரு, பி.ஆர்.எஸ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு, பூங்கா தெரு, திருவள்ளுவர் தெரு, ஸ்கூல் தெரு, மசூதி தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும் என தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications