சென்னையில் இன்று 5 மணிநேர மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று (நவம்பர் 4) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி என்பது நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் இன்று (நவம்பர் 4) சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் தடைப்பட உள்ள இடங்கள் பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மதியம் 2 மணிக்குள் மேற்கூறிய பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
அதன்படி வியாசர்பாடி பகுதியில் மின்சாரம் தடைப்படும் இடங்களின் விபரம் வருமாறு: காசா கிராண்ட், ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், விபிச நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், தனிகாசலம் நகர் - இ பிளாக் மற்றும் எப் பிளாக், கவுரி நகர், பாலகிருஷ்ணா நகர், அய்யப்பன் நகர், பரசுராம் நகர், லட்சுமி நகர், தணிகை நகர், வசந்தம் நகர், காமாட்சி நகர், வித்யா நகர், நடேசன் நகர், திருமலை நகர், ஜிஎன்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் கணபதி தோட்டம், விஜிபி சந்தோஷ் நகர், விபிசி நகர், காமாட்சி அம்மன் நகர், கந்தன் நகர், சீனிவாசா நகர், கற்பகம் நகர், பிருந்தாவன் கார்டன், பிஏ மேடு, பெரியார் சாலை, நேதானி தெரு, படேல் தெரு, அய்யர் தோட்டம், வாசுதேவன் தோட்டம், மெரிடியன் மருத்துவமனை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் , விஜயா பார்க், எரிக்கரை, உமையாள் கல்யாண் மண்டபம், சிஎம்டிஏ அனைத்து இடங்களும், சீதாபதி அனைத்து பகுதிகளில் மின்சப்ளை இருக்காது.
மேலும் நடராஜ் நகர் 1 முதல் 5வது கிராஸ், கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சண்முக சுந்தரம் நகர், 200 அடி ரோடு, குரு ராகவேந்திரா நகர், கன்னி அம்மன் நகர், வதபெரும்பாக்கம், வேதாசலம் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், பாலாஜி நகர், கந்தசாமி நகர், தனிகாசலம் நகர், திருமலை நகர், விஎஸ் மணி நகர், கிருஷ்ணா நகர், சீக்ரெட்ஸ் காலனி, சரஸ்வதி நகர், சின்ன தோப்பு, ரங்கா கோ ஆபரேட்டிவ் நகர், டிஜி சாமி நகர், சுமனஹள்ளி நகர், விநாயகபுரம், லோட்டஸ் காலனி, சாமி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications