ரஜினி மற்றும் கமலுக்கு எனது ஆதரவு இல்லை... சிரிக்காமல் சொல்லும் பவர்ஸ்டார் சீனிவாசன்..!
சென்னை: அரசியலில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் தனது ஆதரவு கிடையாது எனக் கூறியுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
பவர்ஸ்டார் சீனிவாசனின் இந்தப் பேட்டியை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா எனத் தெரியாமல் கமல், ரஜினி ரசிகர்கள் பவரை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
பவர்ஸ்டாரை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள், பாஜக, என பல கட்சிகளில் இருந்தாலும் அவரை ஒதுக்கியே வைத்து வந்தது அக்கட்சிகளின் தலைமை.

விளம்பர பிரியர்
அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன் சினிமா மீது கொண்ட மோகம் காரணமாக லத்திகா என்ற திரைப்படத்தில் நடித்து அதனை சொந்தமாக தயாரித்தார். அதனை அவரே அவருடைய ஆட்களை அனுப்பி நொடிந்துபோன திரையரங்குகளில் வலுகட்டாயமாக ஓட வைக்கவும்செய்தார். இதில் விளம்பரபிரியரான சீனிவாசன் தனது பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டார்.

பாஜக
தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதை அடுத்து கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைத்தார் திருமா. பின்னர் நேராக கமலாலயம் முகாமிற்கு தாவிய அவர் பாஜகவில் இணைந்தார். ஆனால் அங்கும் பவரின் வில்லங்கத்தனமான செயல்பாடுகளை கண்டு ஒதுக்கி வைத்தது தலைமை.

ரஜினி மற்றும் கமல்
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு தனது ஆதரவு கிடையாது என சிரிக்காமல் சொல்லியிருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். ரஜினியும் கமலும் பவர்ஸ்டார் சீனிவாசனின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் அதற்கு ஏதோ இவர் இப்படி பதிலளிப்பது போலவும் நினைத்துக்கொண்டு இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார் பவர்.

ரசிகர்கள்
இதனிடையே பவர்ஸ்டார் சீனிவாசனின் இந்தப் பேட்டியை கண்டு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் அவரை கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் பவர்ஸ்டாரை தங்கள் இஷ்டத்திற்கு வசைபாடியும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications