பாலியல் தொல்லை வழக்கில் கைதான தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் நேற்று இரவே ஜாமீனில் விடுவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தொழிலதிபரும், பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகருமான பிஆர் சுந்தர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்தது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம். பிஆர் சுந்தர் மற்றும் அவரது மனைவி உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபரும், பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகருமான பி.ஆர்.சுந்தர். இவர் மீது, தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

PR Sundar sexual harassment Court

அந்த புகாரில், வேலைக்காக பி.ஆர்.சுந்தரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் வாயிலாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பி.ஆர்.சுந்தர் தனது வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து அவரது மனைவியிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர்.சுந்தர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு ஓர் அறையில் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த செய்தி வாசிப்பாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், பிரபல தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் பி.ஆர் சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரில் இருந்த பி.ஆர் சுந்தர் மற்றும் அவருடைய மனைவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதாக இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட பிஆர் சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசியை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் சென்னை சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கு என்றும், காவல்துறை விசாரணைக்கு அனுப்பக்கூடாது என்ற வாதங்களை முன்வைத்தார். மேலும், பிஆர் சுந்தரின் மனைவிக்கு இந்த குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, பிஆர் சுந்தர் மறும் அவரது மனைவியை காவல்துறை விசாரணைக்கு அனுப்ப முடியாது என மறுத்து ஜாமீனில் விடுவித்தது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம். இதையடுத்து நேற்று இரவே இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+