சென்னை, செங்கல்பட்டு ரொம்ப மோசம்.. தயவு செய்து இதை செய்ங்க!.. எச்சரிக்கிறார் Pradeep Kaur!
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்பது குறித்து ஐசிஎம்ஆர் தலைமை விஞ்ஞானி ஒரு எச்சரிக்கையான பதிவை செய்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவல் 13,990 ஆக உயர்ந்தது. அதாவது 14 ஆயிரம் கேஸ்களுக்கு 10 குறைவு. ஒரே நாளில் 1,35,266 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அது போல் ஓமிக்ரான் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த ஓமிக்ரான் சமூகபரவலாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரத்தை தொட்டு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிக வித்தியாசம்
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் பலியாகிவிட்டனர். கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோருக்கும் மீண்டு வெளியே செல்வோருக்கும் இடையே அதிக வித்தியாசம் நிலவுகிறது.

கொரோனா தொற்று
அது போல செங்கல்பட்டில் ஒரு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு 1,696 ஆக உள்ளது. சென்னை , செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டில் நடைபெறும் அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பிரதீப் கவுர்
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சென்னையில் கடந்த 6 வாரங்களாக தொற்று பாதிபபு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இங்கு டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

3 வாரங்கள்
அது போல் தேவையில்லாத பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். அது போல் கடந்த 3 வாரங்களாக கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதத்தை தாண்டியுள்ளது.
Recommended Video

தடுப்பூசி போடுங்கள்
கடந்த இரு கொரோனா அலைகளின் போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பிற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொது இடங்கலில் முகக் கவசம் அணிவதும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications