Dude Movie First Review: டியூட் விமர்சனம் பாசிட்டிவாக வருதே.. 2.19 மணி நேரம்தான் ஓடும்! பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாருங்கள்! 'லவ் டுடே' படத்தின் மூலம் ₹100 கோடி வசூல் நாயகனாக அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து 'டிராகன்' படத்தின் மூலம் மீண்டும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்த பிரதீப் ரங்கநாதன், மீண்டும் ஒருமுறை திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராகிவிட்டார்! அவர் நடித்துள்ள அடுத்த பிரம்மாண்டமான வெளியீடுதான் 'டியூட்'! (Dude)
இயக்குநர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய, அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம், 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

ஏன் இந்த எதிர்பார்ப்பு?
பிரேமலு படத்தின் மூலம் பேமஸ் ஆன, க்யூட் அழகி மமிதா பைஜூ இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர், இவர்களின் கெமிஸ்ட்ரியும், அட்டகாசமாக இருப்பதாகக் காட்டுகிறது!
கசிந்த தகவல் என்ன? 'டூட்' வென்றுவிட்டதா?
சமீபத்தில் வெளிவந்த விமர்சன தகவல்கள் (Dude Review) மிகவும் பாசிட்டிவாக உள்ளன! நம்பகமான வட்டாரங்களின் தகவலின்படி, 'டூட்' திரைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது! 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'டூட்' திரைப்படம் பிரதீப் ரங்கநாதனின் தொடர்ச்சியான மூன்றாவது பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது! 'டூட்' படத்தை பார்த்த CBFC அதிகாரிகள், படத்தின் கதை அமைப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இசையமைப்பும் (Music) ஒளிப்பதிவும் (Cinematography) மிகவும் சிறப்பாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகச்சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டியூட் படத்தின் கால அளவு
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்கு 'UA 16+' சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் ஓடும் நேரம் 139.41 நிமிடங்கள் (தோராயமாக 2 மணிநேரம், 19 நிமிடங்கள்). தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் சில வார்த்தைகளை 'Mute' செய்வது, சில வசனங்களைத் திருத்துவது மற்றும் பிற படங்களின் பாடல்களுக்குத் தேவையான அனுமதிகள் இருப்பதை உறுதி செய்வது போன்ற சில சிறு திருத்தங்களை மட்டுமே அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதற்குப் படக்குழு உடனடியாக சம்மதித்து மாற்றங்களைச் செய்ததால், தணிக்கைச் செயல்முறை சுமூகமாக முடிந்தது!
டியூட் ரிலீஸ் தேதி
காதல், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் சரியான கலவையைக் கொண்ட இப்படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் மொத்தப் பட அனுபவத்துக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 'டூட்' திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 17, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications