தைலாபுரம் தோட்டத்திற்கே வந்த பிரதமர் மோடியின் சகோதரர்.. ராமதாசை சந்தித்து ஆலோசனை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை, பிரதமர் நரேந்திர மோடியின், தம்பி, பிரகலாத் ஜோஷி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தின் அருகேயுள்ள, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாமக ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ராமதாஸ், பிரகலாத் மோடி ஆகியோர் விவாதித்தனர்.
தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக ராமதாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, பிரகலாத் மோடி நினைவு கூர்ந்தார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாசிடம் பிரகலாத் மோடி வழங்கினார்.
ராமதாஸ் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications