பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்னை அப்பல்லோவில் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீரா பென் தம்பதிக்கு 5 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் 4 ஆவதாக பிறந்தவர் பிரகலாத் மோடி. அவருக்கு இளையவர் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர், பிரகலாத்தை தவிர சோமா மோடி, பங்கஜ் மோடி, அம்ரித் மோடி, வசந்தி பென் ஹஸ்முக்லால் மோடி உள்ளிட்டோர் உள்ளனர்.

பிரகலாத் மோடி அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். ரேஷன் கடையில் பணியாற்றிய பிரகலாத் மோடி வயது முதிர்வு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்த போது அவருடைய அலுவலகத்திற்கு சென்ற பிரகலாத் மோடி ரேஷன் கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் விற்பனை செய்வதை எதிர்த்து பேசியுள்ளார். அது போல் பிரகலாத் மோடியும் பாஜக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை குஜராத்தில் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் பிரகலாத் மோடி சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மைசூருவுக்கு சாலை மார்க்கமாக பிரகலாத் மோடி பயணித்த போது விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னையும் தனது கட்சியையும் எதிர்த்தாலும் பிரதமருக்கு பிரகலாத் மீது தனிப்பாசம் உண்டு. பிரகலாத்தும் தாய் ஹீராபென்னும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஹீரா பென் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். தள்ளாத வயதில் ஜனநாயக கடமையை ஆற்றுவதிலிருந்து அவர் தவறியதே இல்லை. தேர்தலின் போது தனது பிறந்தநாளின் போது, தாயின் பிறந்தநாளின் போதும் தாயை பார்த்து ஆசிர்வாதம் வாங்குவதை மோடி வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது அவர் இறந்தது பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய இழப்பாகிவிட்டது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications