சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேள்வி கேட்பதாலேயே எங்களை நீதிமன்றங்களில் நிறுத்தினால்.. யார் உண்மை பேசுவார்கள்?.. பிரகாஷ்ராஜ்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்வி கேட்பதாலேயே எங்களை நீதிமன்றங்களில் நிறுத்தினால்..யார் உண்மை பேசுவார்கள்?..பிரகாஷ்ராஜ்-வீடியோ

    சென்னை: கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியும் என்றால் யாரும் உண்மையை பேச முன்வரமாட்டார்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்தை பயன்படுத்தி சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    அந்த கடிதத்தில் பெருவாரியான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தை போர் முழக்கமாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும்.

    கே.எஸ்.அழகிரி ஒரு கூமுட்டை... அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்கே.எஸ்.அழகிரி ஒரு கூமுட்டை... அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

    கோரிக்கை

    கோரிக்கை

    சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் மட்டும் தெரிவிக்காமல் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    49 பேர் மீது வழக்கு

    49 பேர் மீது வழக்கு

    அந்த கடிதத்தில் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில் மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய 49 பேர் மீது நாட்டின் நற்பெயரை கறைப்படுத்துதல், பிரிவினைவாத போக்குகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பீகார் மாநிலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    திகைப்பு

    திகைப்பு

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில் கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.

    கட்சித் தலைவர்

    கட்சித் தலைவர்

    சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும். மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும்.

    உண்மை பேச

    உண்மை பேச

    அவர் இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார். கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியும் என்றால் யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

    English summary
    Actor Prakash Raj says that What sedition is there in writing letter to PM? if we are being appeared in court only because of we raise questions means who can come forward and say truth?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X