"இந்திக்கார பய".. சீமானை வளைத்த பிரஷாந்த் கிஷோர்.. இது லிஸ்டுலேயே இல்லையே.. பரபர மோதல்
என் மீது வழக்கு போட்டு உள்ளார்களே.. வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் மீது வழக்கு போடுவார்களா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
சென்னை: இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான் என்று சீமான் பேசிய வீடியோவை பிரஷாந்த் கிஷோர் பகிர்ந்து உள்ளார்.
வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும்.
பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

வீடியோ
இந்த விவகாரத்தில் நிறைய வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்படும் நிலையில்தான் பிரஷாந்த் கிசோர் திடீரென பீகார் தொழிலாளர்கள் பற்றி பேசி உள்ளார். அதில், தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என போலி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்தளாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை கிடையாது. தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்ற. இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன், இந்த விஷயத்தில் சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோக்களை பகிர்ந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உண்மையிலும் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, என்று பிரஷாந்த் கிஷோர் குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை
இதை பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை என் மீது வழக்கு போட்டு உள்ளார்களே.. வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் மீது வழக்கு போடுவார்களா? அவர்களால் போட முடியுமா?, என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் தற்போது சீமான் வீடியோ ஒன்றை பகிர்ந்து பிரஷாந்த் கிஷோர் இந்த விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டு உள்ளார். அதில், இந்த விவகாரத்தில் தவறான வீடியோக்கள், பொய்யான வீடியோக்களை பகிர்ந்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
சட்டப்படி
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் தமிழ்நாட்டில் இருக்கும் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் மக்களை மறக்க கூடாது. அவர்கள் செய்யும் விஷயங்களையோ மறந்து விட கூடாது. சீமான் போன்ற நபர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்களே. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை துன்று பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார். சீமான் வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்த கேள்வியை எழுப்பி உள்ளார் பிரஷாந்த் கிஷோர்.

வீடியோ
அந்த வீடியோவில் பேசும் சீமான், இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. வன்புணர்வு பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று சீமான் பேசி உள்ளார். அவரின் இந்த வீடியோவை இந்தியில் மொழி பெயர்த்து பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டு உள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications