மாற்று அரசியல் பேசி.. தனியாக நின்ற.. பிரசாந்த் கிஷோருக்கு பீகாரில் சவுக்கடி.. விஜய் சுதாரிப்பாரா!
சென்னை: பீகார் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இக்கூட்டணி 120 முதல் 140 இடங்களை வெல்லக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 93 முதல் 110 இடங்களை மட்டுமே பெறக்கூடும். அங்கே மெஜாரிட்டி பெற 122 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்புகள் சொல்வது என்ன?
உதாரணமாக பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் JVC poll கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 135 முதல் 150 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று JVC poll தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக JVC poll கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக போல் டயரி கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 184 முதல் 209 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று போல் டயரி கூறி உள்ளது. காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 32 முதல் 49 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு என்று போல் டயரி கூறி உள்ளது. மற்றவை 1-5 இடங்களில் வெல்லும் என்றும் இதில் கணிக்கப்பட்டு உள்ளது.
டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போலில் பீகாரில் என்டிஏ ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி 145- 160 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2020 தேர்தலில் என்டிஏ 125 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 20 முதல் 35 இடங்கள் கூடுதலாகப் பெற்று, அதன் பலம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கட்சி அடிப்படையில் பார்க்கும்போது நிதிஷின் ஜேடியு 2020-ல் 43 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 59 முதல் 68 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 16 முதல் 25 இடங்கள் அதிகமாகப் பெறும் எனத் தெரிகிறது. பாஜக கடந்த 2020ல் 74 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 72 முதல் 82 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - ஜேடியூ தேசிய ஜனநாயக கூட்டணி 133-159 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 75-101 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் 0-5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி 46.2 சதவீதம், காங்கிரஸ் கூட்டணி 37.9 சதவீதம் வாக்கும், ஜன்சுராஜ் கட்சி 9.7 சதவீதம் வாக்கும் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் வீழ்ச்சி
பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகலாம் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கிய கருத்துக் கணிப்பு நிறுவனங்களான சாணக்கியா, போல் டயர், தைனிக் பாஸ்கர், மேட்ரைஸ், பீப்பிள்ஸ் இன்சைட் மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் ஆகியவை இந்த கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்தக் கட்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக அவை குறிப்பிட்டுள்ளன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் அவரின் ஜன சுராஜ் கட்சிக்கு பூஜ்ஜியத்திலிருந்து ஐந்து இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளன. இது அக்கட்சியின் தேர்தல் பயணம் சவாலானது என்பதைக் காட்டுகிறது.
பிரசாந்த் கிஷோர்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் 2026ல் விஜய் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பெரும்பாலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முக்கியமாக கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்தல் முடிவுகளை வெகுவாக பாதிக்கும். முக்கியமாக 2-5 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பலர் தோல்வியை தழுவும் வாய்ப்புகள் உள்ளன.
இதே அரசியலைத்தான் இந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை அவர் வெகுவாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் முதல்வர் பதவி
மாற்று அரசியல், பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்று என்று கூறி.. அரசியல் செய்தவர் பிரசாந்த் கிஷோர். முக்கியமாக தவெக ஸ்டைலில் influencer அரசியல் செய்தார் பி.கே. ஆனால் அங்கே அவரின் அரசியல் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இதே அரசியலைத்தான் விஜய் செய்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் 2026ல் பிகே போல தனியாக நின்று விஜய் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பெரும்பாலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முக்கியமாக கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்தல் முடிவுகளை வெகுவாக பாதிக்கும். முக்கியமாக 2-5 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பலர் தோல்வியை தழுவும் வாய்ப்புகள் உள்ளன.
பீகாரில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை பிரஷாந்த் கிஷோர் பிரிக்கிறார், ஆனால் வெற்றி வாய்ப்பு இல்லை என்று கணிப்பு சொல்கிறது. அதே அரசியலை தமிழ்நாட்டில் விஜய் செய்யும் பட்சத்தில்.. அதாவது அவர் தனியாக நிற்கும் பட்சத்தில் பி.கேவிற்கு ஏற்பட்ட நிலைமை. ஏற்படலாம். தமிழ்நாட்டில் விஜய்க்கு இது பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications