திமுக ஒரே ஒரு சின்ன தோசை.. தவெக கல்யாண விருந்து குளோஸ்.. காங்கிரஸ் டீலிங் உடைத்த பிரவீன் சக்ரவர்த்தி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி சின்ன தோசையை பகிர்ந்து கொள்ள சொல்லியதாகவும், தவெக பெரிய கல்யாண விருந்துக்கு அழைத்ததாகவும் பிரவீன் சக்ரவர்த்தி சூசகமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Praveen Chakaravarthy)
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் மிகப்பெரிய பேரியக்கம். 25-30 சீட்டுகள் எப்படி போதுமானதாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு தேவையான மரியாதையும், சீட்டும் வேண்டும். அது திமுகவில் இல்லை. அதனால் தான் இவ்வளவு கொந்தளிப்பும், ஆதங்கமும். நிறைய சீட் கொடுத்திருந்தால் பெரியளவுக்கு சிபாரிசுகள் வேலை செய்திருக்காது.

சின்ன தோசையா.. கல்யாண விருந்தா
காங்கிரஸில் வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம். ஒருபக்கம் சின்ன தோசையை வைத்துவிட்டு அனைவரையும் பகிர்ந்து கொள்ள கூறினார்கள். இன்னொரு பக்கம் கல்யாண விருந்து வைத்து, அனைவரையும் வாருங்கள். உணவருந்தாலம். என்று அழைத்தார்கள். சின்ன தோசை, பீட்சாவை கொடுத்து பகிர்ந்து கொள்ள சொன்னதை விட, பெரிய மசால் தோசை அல்லது கல்யாண விருந்தாக மாற்றி அனைவரும் சாப்பிடலாமே.
விஜய் அரசியல்
அந்த முயற்சியை தான் அனைவரும் எடுத்தோம். எல்லா மாநிலங்களிலும் கட்சியில் சேர்ந்த உடனே சீட் கிடைத்துள்ளது. அரசியலில் இது இயல்பு. இதன் பின்னணியில் பணம் இருப்பதாக அவதூறு சொல்ல கூடாது. காங்கிரஸ் கட்சி தலைமை பல்வேறு காரணங்களுக்காக 25 சீட்டுகளை ஒப்புக் கொண்டனர். தங்கள் பலம் என்னவென்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லை. நாங்கள் தேசிய கட்சி. மாநில கட்சிகளை விட நாங்கள் வேட்பாளர் தேர்வு செய்வதற்கு சற்று நேரம் எடுக்கும்.
15 - 20 சதவீதம் வாக்கு
அவர்கள் கொடுத்திருப்பதே 28 சீட். அதற்கு 1,000 பேர் போட்டி போடுகிறார்கள். இதில் இருந்து எப்படி தேர்வு செய்ய முடியும். விஜய் அரசியல் வருகையால் தலித் வாக்குகள் பிரியும். இந்த நேரத்தில் திருமாவளவன் போட்டி அல்லது போட்டியில்லை என்று குழப்பம் ஏற்படும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டாம். விஜய் நிச்சயமாக 15 - 20 சதவீதம் வாக்கு வாங்குவார். விஜயை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சந்தித்தோம்" என்றார்.
-
15 வருடங்களுக்கு பின் அதிசயம்! காங்கிரஸின் ‘சர்ப்ரைஸ்’ சாய்ஸ் விஸ்வநாதன்! கக்கன் கால சென்டிமென்ட் -
இலவச மழையில் புதுச்சேரி: யார் டாப்? விஜய்? ரங்கசாமி? காங்கிரஸ் பிழைக்குமா? -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம்












Click it and Unblock the Notifications