வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா? அப்ப இது உங்களுக்கு தான்! எதுவும் தெரியாம போய் சிக்கிக்கொள்ளாதீர்

வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் தமிழர்கள் அங்கு அவர்களுக்கு உறுதியளித்தப்படி வேலை, வேலை நேரம், ஊதியம், உணவு, உறைவிடம், போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்கின்றனர்.
அவ்வாறு அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இது போன்ற குறைகளைச் சரிசெய்ய "கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்டத்திட்டங்கள், கலாச்சாரம், மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக ஏற்கனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக தமிழ் நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள் இது குறித்து போதிய முன் அனுபவமோ போதிய தகவல்களோ இல்லாமல் செல்லும் நிலையே உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பெற தேவையான முன்பயண புத்தாக்க பயிற்சி பெற நீண்ட தூரம் பயணித்தும், கூடுதல் செலவு செய்தும் சென்னைக்கு வர வேண்டிய நிலையே உள்ளது.
அரசின் நல திட்டங்கள் அனைத்தும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். இந்த அடிப்படையில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' சென்னை மட்டுமின்றி வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அவ்வறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில் ரூ.54,75,000 செலவில் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் அமைத்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையத்தில் கீழ்க்கண்ட மூன்று பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
அ) வேலைத்தேடி வெளிநாட்டிற்கு செல்லும் அனைவருக்குமான முன் பயண புத்தாக்க பயிற்சி
ஆ) கட்டிட தொழிலாளர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் வீட்டு வேலை போன்ற பணிகளுக்காக செல்பவர்களுக்கு இப்பணிகளுக்கான அடிப்படை தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தெளிவுகள் ஏற்படுத்துதல்.
இ) ஆங்கிலம் மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சி.
இப்பயிற்சிக்காக வழங்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டுள்ள வலைதளத்தில் (nrtamils.tn.gov.in) முகவர்கள் மூலம் பயிற்சியில் கலந்து கொள்வோர் தங்களை பதிவு செய்யலாம். மேலும் புதியதாக வேலைக்கு செல்ல விரும்பும் நபர்களும் நேரடியாக பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு முன் பயண புத்தாக்க பயிற்சி கையேடுகள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், இப்பயிற்சி மையங்கள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு காணொளிகள் மூலமாகவும் மற்றும் கிராம சபைக் கூட்டங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் அயல் நாட்டு வேலை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி தமிழர்கள் பாதுகாப்பான புலம் பெயர்தலை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.''
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications