கல்யாண மேடையில் போட்டோ ஷூட் ட்ரோல் வீடியோ.. மறக்க முடியாத பரிசு.. திக்குமுக்காடிப்போன புதுமண ஜோடி
சென்னை: திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் Pre-Wedding வீடியோக்கள் திருமண நாளில் மறக்க முடியாத பரிசாக தம்பதிகளுக்கு இருக்கின்றன. அப்படி எடுக்கப்பட்ட திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோக்களை ட்ரோல் செய்து, திருமண நாளில் வெளியிட்டால் எப்படி இருக்கும்...அப்படியான ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு எடுக்கப்படும் போட்டோ ஷூட் வீடியோக்கள் திருமண ஜோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பார்த்து ரசிக்கும் அற்புதமான விஷயமாக இருக்கிறது. திருமண வீடியோக்கள் முன்பு போல் எடிட் செய்யப்படுவது இல்லை. சினிமா படங்களை மிஞ்சும் வகையில் குறுப்படமாக தயாரிக்கப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிளை அழைப்பு முதல் பெண் அழைப்பு வரை ஒவ்வொரு காட்சிகளும், காமெடி, கண்ணீர், கவலை, மகிழ்ச்சி, குறும்பு என அனைத்தும் உணர்வு பூர்வமாக அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டு சினிமா படம் போல் தயாரிக்கப்படுகின்றன, அதற்கு சினிமா படங்களின் பாடல்கள் காட்சிகள், பின்னணி இசையாக வைத்து தரப்படுவதால் கல்யாண ஆல்பம் வீடியோ பல ஆண்டுகள் ரசிக்கும் படி இருக்கிறது.

கல்யாண ஆல்பம் இப்படி என்றால்.கல்யாணத்திற்கு முன்பு Pre-Wedding போட்டோ ஷூட் நடத்தப்படுகிறது. அந்த போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் அல்லது திருமணம் முடிந்து நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் குறும்படம் போல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த குறும்படங்கள் ஒளிபரப்புவது என்பது சமீப காலத்தில் டிரெண்டாக உள்ளது.இந்த குறும்படம் குறும்பு படமாக இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் மணப்பெண்,மணமகனை கேலி செய்யும் வகையில் இருந்தால் எப்படி இருக்கும்... அப்படியே அதிர்ந்து போவார்கள் அல்லவா.. ஆனால் இதனை மணப்பெண்ணும், மணமகனும் மாறி மாறி சிரித்தபடி ரசிக்கிறார்கள். இவர்களுடன் மணப்பெண்ணின் உறவினர்களும், மாப்பிள்ளையின் உறவினர்களும் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசிக்கிறார்கள்..

அந்த ட்ரோல் வீடியோவில் ஜோதிகாவும் சூர்யாவும் காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே என்ற பாடலுக்கு நடனம்ஆடுவார்கள். அதேபோல் மணப்பெண்ணை துரத்தியபடி மணமகன் வருவதாக வீடியோ உள்ளது. அதற்கு உயிரே உயிரே தப்பிச்சி எப்படியாவது ஓடிவிடு என்று வடிவேலு காமெடியை பொறுத்தி உள்ளார்கள்.
இதேபோல் அடுத்த காட்சியில், பீட்சா படத்தில் விஜய் சேதுபதி தன்னை திருமணம் செய்ய போகும் பெண்ணை பார்த்து ப்பா... என்று சொல்லுவார்.. அதனையும் கேலிக்கு பயன்படுத்தி உள்ளனர்.கிட்டத்தட்ட அந்த ட்ரோல் வீடியோ முழுமையாக மணப்பெண் என்று மாப்பிள்ளையை வச்சு செய்திருக்கிறார்கள். அதையும் அவர்கள் எந்த சலனும் இல்லாமல் ரசித்தார்கள். அத்துடன் உறவினர்களும் ரசித்தார்கள்.
Wedding shoot😆😆Sync pic.twitter.com/04FtkBLH4A
— Monkey Cinema (@monkey_cinema) November 1, 2023
இந்த ட்ரோல் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியானது. மேடையில் இருக்கும் ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஜாலியாக வீடியோவை பார்த்து ரசித்தனர். இந்த வீடியோக்கள் அங்கிருந்தவர்களை மட்டுமல்ல, இணையதளவாசிகளையும்சிரிக்க வைத்தது. இது ஒரு நெருங்கிய நண்பரின் விளையாட்டுத்தனமான குறும்பு போல் இருந்தது.சிரிக்க வைக்க வேண்டும் என்று நோக்கில் நண்பர்கள் செய்த குறும்பு விளையாட்டு இனி வரும் காலத்தில் பல கல்யாணங்களில் பார்க்கலாம்.. என்ன நடந்தது என்பதை நீங்களே வீடியோவில் பாருங்கள்.
முன்னதாக இது போல் பலமுறை ட்ரோல் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளன.மாப்பிள்ளையை மொக்கை ஆக்குவதற்காக மாலா மாலா என்று வடிவேலு சுற்றும் புகைப்படம், குப்பை தொட்டி விளக்கமாறு பரிசாக அளிப்பது, பெண் போல் வேடமிட்டு வந்து தொட்டு தொட்டு பேசி மணமகளை வெறுப்பேற்றுவது என பல்வேறு சேட்டைகளை மாப்பிள்ளைகளின் நண்பர்கள் ஈடுபடுவார்கள்.. அது ரசிக்கும் படி இருந்தால் பிரச்சனை இல்லை.. மாறாக குறும்பு எல்லை மீறுவதாக இருக்கும் போது சிக்கலாகிறது.












Click it and Unblock the Notifications