நீங்க மட்டும் உங்கள் வாக்கு சதவீதத்திற்கு ஏத்தபடியாவா போட்டியிடுறீங்க.. அதிமுகவுக்கு பிரேமலதா கேள்வி
சென்னை: அதிமுக வாங்கிய 18 சதவீதம் வாக்கின் அடிப்படையில்தான் தற்போது தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டதா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்டோர் இடம்பெற்ற கூட்டணியில் தேமுதிக இருந்தது. கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு படுதோல்வி அடைந்தது தேமுதிக.
இதையடுத்து சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்றே அறிவித்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவை அழைக்காமலேயே மற்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுக்கு தொகுதி ஒதுக்கிய பிறகு தேமுதிகவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

தேமுதிக
தேமுதிகவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒதுக்கியது போல் இந்த முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு தேமுதிக கேட்டது. ஆனால் இதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை. வெறும் 13 தொகுதிகளே ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தது.

சுதீஷ்
இதையடுத்து மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தோற்று போகும். எடப்பாடி தொகுதிகளில் அதிமுக மண்ணை கவ்வும் என்றெல்லாம் சுதீஷும், விஜய பிரபாகரனும் தெரிவித்தார்கள்.

தொகுதி எண்ணிக்கை
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகளாக நடந்து கொண்டார்கள். தேமுதிகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் தொகுதிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

முதல்வர்
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் இன்றைய தினம் பதில் அளித்துள்ளார். அவரிடம் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் எல்லா கட்சிகளுக்கும் தொகுதியின் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டது என முதல்வர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிமுக
அதற்கு பிரேமலதா கூறுகையில் கடந்த எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் 18 சதவீதம்தான். அந்த சதவீதத்திற்கு ஏற்பதான் இத்தனை இடங்களில் அதிமுக போட்டியிடுகிறதா? என பிரேமலதா கேள்வி எழுப்பியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 18 சதவீதம் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications