விஷயம் டாப் சீக்ரெட்.. பிரேமலதா அதிரடி முடிவு.. 4 ஆம் தேதி சம்பவம் லோடிங்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பணியாற்றுள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளன. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததும், பிரேமலதாவின் கருத்துகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதற்கு பிரேமலதா தரப்பில் சூடான ஒரு பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அனைவருக்கும் உழைப்பாளர் தினம் வாழ்த்துகள். காய்ந்த மரம் தான் கல்லடி படும். இதற்கும் சேர்த்து வருகிற மே 4 ஆம் தேதி நான் பதில் சொல்கிறேன். கடந்த ஒரு 7 மாதங்களாக பார்க்கிறேன். ஆண்ட, ஆளும், புதிய கட்சிகள், ஊடகங்கள், யூடியூபர்கள் எல்லாரின் ஒரே கவனம் தேமுதிக தான்.

10 பேரும் சட்டமன்றம் செல்வோம்
எல்லாரும் வாழ்த்தினாலும் தேமுதிக தான். திட்டினாலும் தேமுதிக தான். பழுத்த மரம் தான் கல்லடிபடும். அந்த வகையில் வாழ்க வசவாளர்கள். எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வருகிற 4 ஆம் தேதி பதில் சொல்கிறேன். தேமுதிக சார்பில் இந்த தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளோம். கேப்டன் நல்லாசியுடன் 10 பேரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவோம்.
ஆக்கபொறுத்தவர்கள், ஆள பொறுங்கள். தேர்தல் முடிவுக்கு இன்னும் 2 நாட்கள் தான் இருக்கின்றன. 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கினால் 5 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும். பெரிய எதிர்பார்ப்புகள், கற்பனை, ஹைப் எதுவும் தேவையில்லை. பொறுத்திருந்த பாருங்கள். எல்லாருக்கும் நல்லதே நடக்கும். எங்களின் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார்.
எல்லாவற்றுக்கும் 4 ஆம் தேதி பதில்
எல்லோருமே களத்தில் தீவிரமாக பணியாற்றியுள்ளனர். எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறோம். 4 ஆம் தேதி வெற்றி செய்தி வரும். அதன் பிறகு உங்களை அழைத்து எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறேன். எங்கள் மீதான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட எல்லா விமர்சனங்களுக்கும் 4 ஆம் தேதி பதில் சொல்கிறேன்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications