கெடுவார் கேடு நினைப்பார்.. நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டதே.. யாரை சொல்கிறார் பிரேமலதா?
Recommended Video

சென்னை: கெடுவார் கேடு நினைப்பார் என்றும் நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். இவர் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவுடன் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராக இருந்த நிலையில் முதலில் பாமகவை அழைத்து அவர்களுக்கு 7+1 தொகுதிகளை ஒதுக்கினர்.

ஒதுக்கீடு
இதையடுத்து பாஜகவை அழைத்த அதிமுக, அவர்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் தேமுதிகவோ தங்களுக்கு பாமகவை விட அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு கோரி வந்ததாக தெரிகிறது.

எம்பிக்கள்
இதற்கு அதிமுக உடன்படாததால் அதிமுக- தேமுதிக உடன்பாடு இழுபறியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுகவுக்கு கிடைத்த 37 எம்பிக்களால் என்ன பயன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

சதி வேலைகள்
இதனால் அதிமுக - தேமுதிக கூட்டணி உருவாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. அப்போது பிரேமலதா பேசுகையில் எண்களில் ஒன்றும் கிடையாது. எண்ணங்களில்தான் எல்லாம் இருக்கிறது. இந்த கூட்டணி அமையாமல் இருக்க சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டனர்.

தேமுதிக
எனினும் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. கெடுவார்தான் கேடு நினைப்பார்கள் என மறைமுகமாக திமுகவை விமர்சனம் செய்தார். ஒரே நேரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதை திமுக பொருளாளர் துரைமுருகன் அம்பலப்படுத்தினார். இதனால் திமுக மீது பிரேமலதா கடுங்கோபத்தில் உள்ளார்.

எண்ணங்கள்
எண்களில் ஒன்றும் கிடையாது என கூறும் பிரேமலதா, இத்தனை நாட்கள் கூட்டணி இழுபறிக்கு தொகுதி எண்ணிக்கையே காரணம் என கூறப்படுகிறது. இதை அவரே செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார். கடந்த முறை தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்திற்கு எல்லா கட்சிகளையும் அழைத்தது போல் இந்த முறையும் செய்திருக்கலாம் என்பது சிறிய வருத்தம் என்றார். ஆனால் தற்போது பேட்டியில் இவ்வாறு மாற்றி பேசியுள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications