தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தா உங்களுக்கு ஏன் உறுத்துது? திருமாவளவன் மீது பிரேமலதா கடும் டென்ஷன்
சென்னை: தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தா உங்களுக்கு ஏன் உறுத்துது? என திருமாவளவனுக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னி அரசுக்கு அமைச்சர் சீட் கொடுத்ததால் தானே நீங்க கூட்டணி வைத்து இருக்கீங்க.. ஏன் கம்யூனிஸ்ட்கள் மாதிரி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துவிட்டு அமைச்சர் பதவி வாங்காமல் இருந்துருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:-

திருமாவளவன் தான் கூறினார்
சகோதரர் திருமாவளவன் மீது எனக்கு இப்போது வரை மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இன்று நேற்று அல்ல.. தலைவர் விஜயகாந்த் இருக்கும் போதே திருமாவளவன் மீது தேமுதிகவிற்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவருடைய வெளிச்சம் டிவியினை தொடங்கி வைத்தது கேப்டன் விஜயகாந்த் தான். எத்தனையோ தலைவர்கள் இருக்கும் போது அவரைத்தான் அழைத்தார்.
சரி, இன்னைக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் தேமுதிகவுக்கு கொடுத்துவிட்டாங்க.. அதனால் நாங்க திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அண்ணன் சொல்வதாக நீங்க சொல்றீங்க.. இதே அண்ணன் திருமாவளவன், அண்ணன் வைகோ, கம்யூனிஸ்டு கட்சிகள் எல்லாரும் சேர்ந்து தான் மக்கள் நல கூட்டணியை கடந்த 2016-ல் தொடங்கினார்கள். அப்போது இதே அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தை திருமாவளவன் வந்து சந்தித்து எங்க கூட்டணிக்கு நீங்க தலைமை ஏற்க வேண்டும். நீங்க தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியவரும் திருமாவளவன் தான்.
இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது.. நம்ம இஷ்டத்திற்கு வார்த்தைகளை மாற்றி பேசலாம். ஆனால் நாம் சொன்ன வார்த்தைகள் வரலாற்றில் பதிவாகிவிடும். எனவே அவர் கேப்டனை முதல்வர் வேட்பாளராகவே ஏற்றுக்கொண்டவர். ஆனால் இன்றைக்கு ஏன்.. அன்று மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார். இன்னைக்கு என்ன நாங்க 10 சீட் கொடுக்கிறதால் போறோம் என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இதை யாரும் புண்படுத்திவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து சொல்கிறேன். திமுக கூட்டணியில் இருக்கும் போது என் தொகுதிக்கு வந்து திருமாவளவன் பிரசாரம் செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின் போது கூட அண்ணன் திருமாவளவன் என் பெயரை உச்சரிக்கும் போது நான் எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்ததாக சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால் அன்றைக்கும் திருமாவளவன் அவர்கள் என் மீது எந்த தவறும் இல்லை என கூறினார்.
கம்யூனிஸ்ட்கள் மாதிரி இருக்கலாமே
நீங்க தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு.. அவங்க அப்படி கிடையாது. அவங்க எப்போதும் என் சகோதரி என்று அவ்வளவு அழகாக சொன்னார். மிகப்பெரிய ஒழுக்கமாக, நேர்மையான நபர் தான் அண்ணன் திருமாவளவன்.. ஆனால் இன்றைக்கு அவருடைய நிலைப்பாடு மாறினதாலும், அவர்களுக்கு ஒரு அமைச்சர் கிடைத்ததனாலும், இன்னொரு கூட்டணிக்கு போயிருக்காங்க.. இது தான் உண்மை.. யாரும் மறைக்க முடியாது.
கம்யூனிஸ்ட்கள் கூட இருக்காங்க.. அவங்க எங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவிகள் வேண்டாம்.. வெளியில் இருந்து மட்டும் ஆதரவு என சொல்லியிருக்காங்க அல்லவா.. அதே மாதிரி நீங்களும் செய்ய வேண்டியது தானே.. ஏன் நீங்க செய்யல.. நீங்களும் எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியது தானே.. வன்னி அரசு எனக்கு நேராக தான் இருக்கிறார். அவர் எனக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துவார். நானும் வணக்கம் செலுத்துவேன்.
தேமுதிகவை கண்டால் மட்டும் ஏன் இப்படி
அமைச்சர் கிடைச்சு இருக்கு.. நீங்க கூட்டணிக்கு போய் இருக்கீங்க.. எல்லா கட்சியும் இருக்கும்.. ஆனால் ஏன் தேமுதிகவை கண்டால் மட்டும் ஏன் இப்படி உறுத்துது.. அமைச்சர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் தான் நீங்க கூட்டணிக்கு போயிருக்கீங்க.. இது தானே உண்மை.. ஏன் கம்யூனிஸ்ட்கள் மாறி இருந்து இருக்கலாமே.. அப்போ நீங்க விரும்பியது அமைச்சர் பதவி.. ஜெயிச்சது இரண்டு இடம். அதில் ஒரு அமைச்சர்.. இதுக்கு ஏன் தேமுதிகவை இழுக்குறீங்க.. நம்ம நிலைப்பாடு வேறு ஒன்றை எடுத்துக்கொண்டு, அடுத்தவங்க மீது குற்றம் சொல்வது மிக மிக தவறான செயல்.. இதனை அண்ணன் திருமாவளவன் சொல்ல மாட்டார் என நினைக்கேன்.." இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
