“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
சென்னை: "நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" என பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. அதிமுக, திமுக என இரு பக்கமும் தேமுதிக கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிக, திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. கூட்டணியில் இணைந்த உடனேயே, தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை திமுக அளித்தது. அதன்படி தேமுதிக பொருளாளரான எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா உறுப்பினராகி விட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது இரண்டு மகன்களும் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் டிஃபென்டர் (Defender) கார், முன்பு நின்றபடி எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இதனை எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்தனர். திமுக கூட்டணியில் அவர்கள் இணைந்ததற்காக கொடுக்கப்பட்ட பரிசு தான், இந்த கார் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் இணைந்த பிறகு முதல் முறையாக இன்று தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுவது என்பது பற்றி விவாதிப்பதற்காக கூட்டப்பட்டது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால், தேமுதிகவின் இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது. அது தொடர்பாகவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது சர்ச்சைக்குள்ளான கார் பற்றியும் பேசினார். "நாங்கள் அந்த சொகுசு காரை வாங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த காரை இப்போதுதான் திருப்பதி செல்வதற்கு நாங்கள் பயன்படுத்தினோம். உடனேயே அந்த காரை நாங்கள் இப்போதுதான் வாங்கியதாக அவதூறு பரப்புகிறார்கள்.
ஒரு கார் வாங்கும் அளவுக்கு கூட கேப்டன் குடும்பத்திற்கு தகுதி இல்லையா? தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்து கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு கேப்டன் சொந்தக்காரர். அவர் தன் வாழ்நாளில் சம்பாதித்த வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் மேலாக மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவர்.
அவர் செய்த ஒவ்வொரு உதவிக்கும் பின்னால் இருந்தது நான் என்று இந்த உலகம் அறியும். அவரது குடும்பம் ஒரு கார் வாங்கியதை பொறுத்துக் கொள்ளாமல் விமர்சிப்பவர்கள், கேப்டன் மக்களுக்கு செய்த உதவிகளில் ஒரு சதவீதமாவது செய்திருப்பீர்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், "தேமுதிகவை எந்த குறையும் சொல்ல முடியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை யுடியூப் சேனல்கள் வெளியிட்டு வருகிறது. அதை பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. லஞ்ச ஊழல், சொத்துகுவிப்பு வழக்கு. கள்ளச்சாராய வழக்கு, குண்டர் சட்டத்தில் கைது, கனிமவள கொள்ளை வழக்கு என ஏதாவது ஒரு குற்றம் தேமுதிகவின் மீது சுமத்த முடியுமா? 21 வருடமாக இருக்கும் கட்சி, 29 எம்.எல்.ஏ.க்களை கொண்டு எதிர்கட்சி தலைவராக கேப்டன் சட்டமன்றத்திற்கு சென்ற கட்சி.
கேப்டனை எப்படி குடிக்கிறார், அடிக்கிறார் என்று நெகட்டிவாக சித்தரித்து காண்பித்தார்களோ அதே மாதிரி எங்களையும் குறை சொல்லி வருகிறார்கள். ஒன்று பேரம், இன்னொன்று பெட்டி என்று தான் என்னை குறை சொல்ல முடியும். வேற என்ன சொல்ல முடியும், எதுவும் சொல்ல முடியாது.
குறை சொல்பவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அதற்கெல்லாம் நாங்கள் விளக்கம் அளிக்க தேவையில்லை. கேப்டன் குடும்பம் ஒரு கார் வாங்கியதை விமர்சிப்பவர்களுக்கு கேப்டனை பற்றி பேசக்கூட தகுதி இல்லை. அவர் செய்த உதவிகள் மக்களுக்கு நன்றாக தெரியும், அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications