ஒளிமயமான எதிர்காலம்.. எம்ஜிஆர் பாட்டா, சிவாஜி பாட்டா.. பாவம் பிரேமலதாவே குழம்பி போயிட்டாங்க!

விஜயகாந்த்துக்கு பிடித்த பாடல் என்று சொல்லி தவறான தகவலை பிரேமலதா வெளியிட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அம்மாவும் கேப்டனும் பிரிய அந்த 3 பேர்தான் காரணம்- பிரேமலதா அதிரடி- வீடியோ

    சென்னை: எம்ஜிஆர் பாட்டு எது, சிவாஜி பாட்டு எது என்றுகூட தெரியாமல் பேசி பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் ஒரு சலசலப்பையே ஏற்படுத்தி விட்டார்.

    ஒரு சில தினங்களாக பிரேமலதாவை அதிமுகவினர் புகழ, அதிமுகவினரை பிரேமலதா புகழ என ஒரே "ஜில்" பிரச்சாரமாக மாறி காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பிரேமலதா திருச்சி கூட்டத்தில் பேசும்போது, கேப்டனுக்கு டாக்டர்கள் பேச்சு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    அதிக அன்பு

    அதிக அன்பு

    அவர் எப்பவுமே எம்ஜிஆரின் ‘ஒளிமயமான எதிர்காலம்' என்ற பாடலைத்தான் விரும்பி பாடுவார். ஏன்னா.. எம்ஜிஆர் மீது அதிக அன்பு வைத்திருப்பதால்தான் அவர் பாடலை கேப்டன் பாடுகிறார்" என்றார்.
    இப்படி பேசியதும் கூட்டத்தில் ஒரு சிறு முணுமுணுப்பு ஏற்பட்டது.

    எம்ஜிஆர் பாட்டு

    எம்ஜிஆர் பாட்டு

    இதற்கு காரணம், ஒளிமயமான எதிர்காலம் பாடல் "பச்சை விளக்கு" படத்தில் சிவாஜி கணேசன் பாடியது. இது தெரியாத பிரேமலதா அந்த பாட்டை எம்ஜிஆர் பாட்டு என்று சொல்லி விட்டார். இதை மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர்கள் முதல் வேறு யாருமே சுட்டிக்காட்டவும் இல்லை.

    குளுகுளு கோவை.. தொகுதி முழு ரவுண்ட்அப்

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    எம்ஜிஆரை விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் ஒரு கட்டத்தில் அவரை கருப்பு எம்ஜிஆர் என்றுகூட அவரது தொண்டர்கள் அழைத்தார்கள் என்பதும் நமக்கு தெரிந்த சமாச்சாரம்தான்! ஆனால் கேப்டனின் ரோல்மாடல் எம்ஜிஆர்தான் என்று அடிக்கடி சொல்லும் பிரேமலதாவுக்கு எம்ஜிஆர் பாட்டு எது என்பது கூட தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

    என்ன பாட்டு கேப்டன்?

    என்ன பாட்டு கேப்டன்?

    ஒருவேளை கேப்டன் அடிக்கடி பாடும் பாட்டு எது என்பதை மறந்துபோய் இந்த பாட்டை தவறி சொல்லிவிட்டாரா அல்லது எம்ஜிஆர் பெயருக்கு பதில் சிவாஜி என்று தெரியாமல் சொல்லிவிட்டாரா என்பது புரியவில்லை. உண்மையிலேயே.. கேப்டன் எந்த பாட்டைதான் பாடி இருப்பார்?!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+