"பாட்டி Daddy கிட்ட போய்ட்டாங்கப்பா" விஜயபிரபாகரன், சண்முகபாண்டியனை பார்த்ததும் துடித்த பிரேமலதா
சென்னை: "அம்மா பசங்க வந்திருக்காங்க பாருங்கம்மா", "பாட்டி டாடி (Daddy Vijayakanth) கிட்ட போய்ட்டாங்க தம்பி" என தனது தாய் அம்சவேணிக்கு அஞ்சலி செலுத்த வந்த தனது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியனை பார்த்ததும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டார். பாட்டி அம்சவேணிக்கு இரு பேரன்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தத்தை சேர்ந்த கண்ணையாவின் மனைவி அம்சவேணி. இவர்களுக்கு ராதா, பிரேமலதா, சுதீஷ் ஆகிய இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கண்ணையா ஏற்கெனவே மரணமடைந்துவிட்ட நிலையில் அம்சவேணி தனது மகன் சுதீஷுடன் சென்னை சாலிகிராமம் வீட்டில் வசித்து வந்தார்.

அவருக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சுதீஷின் மனைவி பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஈரோட்டில் பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சுதீஷும் பிரேமலதாவும் சென்றுவிட்டனர்.
அம்சவேணி காலமானார்
இன்று காலை முதலே அம்சவேணிக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் பிரிந்தது. பின்னர் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனிடையே தாய் இறந்த செய்தியை பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் சொல்லப்பட்டது. இதையடுத்து ஈரோடு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அவர்கள் சென்னை திரும்பினர். அங்கிருந்து கிளம்பும்போதே அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த கட்சி நிர்வாகிகளை பார்த்து அவர் கண்ணீர் சிந்தினார்.

பின்னர் சென்னைக்கு புறப்பட்டனர். இதனிடையே முதல்வர் ஸ்டாலின், பிரேமலதாவின் தாயார் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதுடன் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.
முதல்வர் அஞ்சலி
அங்கு அம்சவேணியின் மூத்த மகள் ராதாவிடமும் அவரது கணவரிடமும் சுதீஷின் மனைவியிடமும் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருந்தார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தேமுதிக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி.
@PremallathaDmdk , பொருளாளர் திரு. L. K. சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் .
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
@PremallathaDmdk, சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்,
மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்புமணி இரங்கல்
அது போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
தாங்க முடியாத இழப்பு
உலகில் தாங்க முடியாத இழப்பு ஈன்றெடுத்து, அன்புகாட்டி வளர்த்த அன்னையின் மறைவு தான். அன்னையை இழந்து அத்தகைய பெரும் துயரத்தை எதிர்கொள்ளும் திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவரது சகோதரர் திரு. எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் , நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கதறிய பிரேமலதா
இந்த நிலையில் தனது தாயை பார்க்க சுதீஷுடன் சாலிகிராமம் இல்லத்திற்கு பிரேமலதா வந்தார். அவர் தனது தாயின் உடலை பார்த்து "அம்மா அம்மா..." என கதறி அழுதார். பின்னர் தனது மூத்த சகோதரி ராதாவை கட்டி அணைத்து கதறி அழுதார். இதை பார்த்தோரும் கலங்கினர். எத்தனை வயதானாலும் தாய் தாய்தானே!
விஜய பிரபாகரன்- சண்முகபாண்டியன் கண்ணீர்
தனது பாட்டி அம்சவேணி இறந்ததை அறிந்து மாமா சுதீஷ் வீட்டிற்கு விஜய பிரபாகரனும் சண்முகபாண்டியனும் வந்தனர். அப்போது அவர்களை அழைத்துச் சென்று தனது தாயின் உடலை காட்டினார் சுதீஷ். உடனே இருவரும் விம்மி அழுதனர். இதையடுத்து பிரேமலதா, "உங்களை தூக்கி வளர்த்த பாட்டியை பாருங்கப்பா, பாட்டி டேடிகிட்ட போய்ட்டாங்கப்பா" என கதறிய பிரேமலதா, "அம்மா பசங்க வந்திருக்காங்க பாருங்கம்மா, பேரனுங்க வந்திருக்காங்க, எழுந்து பாருங்க" என கண்ணீர் விட்டது அங்கிருந்தோரை கலங்கச் செய்தது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications