காலை 4 மணிக்கெல்லாம்.. யாருக்கு சொல்லணுமோ சொல்லுங்கன்னு சொன்ன டாக்டர்! பிரேமலதா உடைத்த சீக்ரெட்!
சென்னை: விஜயகாந்த் மரணம் தொடர்பாக இதுவரை யாரும் அறிந்திராத புதிய தகவல் ஒன்றை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி அன்று விஜயகாந்தை வழக்கமான மருத்துவ செக் அப்பிற்காக மியாட் மருத்துவமனைக்கு பிரேமலதா அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார். கிறிஸ்துமஸ் என்பதால் முக்கியமான டாக்டர்கள் யாரும் இல்லை அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி அன்று விஜயகாந்தை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு டாக்டர்கள் சொல்லியுள்ளனர். அப்போதும் பிரேமலதா விஜயகாந்துக்கு மனசு கேட்கவில்லை. 26ஆம் தேதி என்றால் கூட்டு எண் 8 வருகிறதே என யோசித்திருக்கிறார்.

இருப்பினும் ஹெல்த் விஷயம் என்பதாலும் டாக்டர்கள் பேச்சை கேட்க வேண்டும் என்பதாலும் 26ஆம் தேதி அன்றே அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது வழக்கமான ரொட்டின் செக் அப்கள் நடைபெற்றிருக்கின்றன. மூச்சுவிடுவதில் மட்டும் விஜயகாந்த்துக்கு மிகுந்த சிரமம் இருந்திருக்கிறது. இதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. இதனால் பதறிப்போன பிரேமலதா டாக்டர்களிடம் அது குறித்து கேட்டிருக்கிறார்.
ஒன்றும் பயப்படத் தேவையில்லை, 2 நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு 28ஆம் தேதி மாலை வீட்டுக்கு போகலாம் என டாக்டர்கள் சொல்லியிருக்கின்றனர். அதன்படி விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் மூச்சு விட மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார் விஜயகாந்த். இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு 27ஆம் தேதி இரவு முதலே விஜயகாந்தின் உடல் நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்துள்ளது.
28ஆம் தேதி காலை 4 மணிக்கெல்லாம் விஜயகாந்தின் கண்கள் அகன்று விரிய ஆரம்பித்திருக்கிறது, மூச்சும் கர்கர்ன்னு வாங்கியிருக்கிறது. பிரேமலதா கைகளை பற்றிய மருத்துவர்கள், விஜயகாந்த் இனிமேல் உயிர் பிழைப்பது கடினம், யாருக்கு சொல்லணுமோ சொல்லுங்கன்னு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போதும் பிரேமலதா டாக்டர்கள் சொன்னதை ஏற்காமல் அழுது துடித்திருக்கிறார். விஜயகாந்தின் இறுதி நிமிடங்களில் நான் உங்களோட இருகேங்க என கணவரை காப்பாற்றத் துடித்திருக்கிறார் பிரேமலதா.
இதையடுத்து தான் 28ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தனது தம்பி சுதீஷை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, டாக்டர்கள் சொன்ன தகவலை சொல்லி வரச்சொல்லியுள்ளார். அதேபோல் மும்பையில் இருந்த தனது 2 மகன்களிடமும் விஷயத்தை சொல்லி சென்னை வரச் சொல்லியிருக்கிறார் பிரேமலதா. விஜயகாந்தின் உயிரை காப்பாற்ற அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் 6.10க்கு முடிந்தது. மேற்கண்ட இந்த தகவலை நேற்று தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்ற விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்வில் பிரேமலதா பகிர்ந்து கொண்டதாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications