"தம்பி ஆதவ் அர்ஜுனா இல்லை! அவை சீக்கிரம் முடிந்துவிடும்" பிரேமலதா சொன்னதும் சிரிப்பலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பி ஆதவ் அர்ஜுனா இந்த அவையில் இல்லை, அதனால் அவை நடவடிக்கைகள், சபாநாயகர் சொன்னது போல் ஒன்றரை மணிக்குள் முடிந்துவிடும் என தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் காமெடியாக தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் சமூக நீதித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

Premalatha Vijayakanth

அப்போது பிரேமலதா பேசுகையில், விருத்தாசலத்தை கோயில் நகரமாக்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன் அவர் தனது தொகுதி சார்ந்த விஷயங்களை பேசினார்.

பிறகு, "தம்பி ஆதவ் இல்லை, அதனால் நான் எனது பேச்சை 10 நிமிடத்தில் முடித்துவிட்டேன். அவையை 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். எனவே அவை நடவடிக்கைகளும் சீக்கிரம் முடிந்துவிடும்" என்றார்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன், "உங்களை போல் அனைவரும் 10 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டால் பிரச்சினையே இல்லை" என்றார்.

சட்டசபையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆரோக்கியமாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்துவிட்டாலே பிரச்சினைதான் என ஒரு பேச்சு எழுகிறது. அவர் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் இப்படியே மாரி மாறி பேச்சு வளர்ந்து கொண்டே இருப்பதால் அவை நடவடிக்கைகளை அன்றைய மானியக் கோரிக்கைகளை விட்டுவிட்டு வேறு ரூட்டில் செல்கின்றன என்கிறார்கள்.

இந்த விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் போட்டு உடைத்துவிட்டார். நேற்றைய தினம் பேசுகையில், "சட்டசபையில் மானியக் கோரிக்கையை தவிர்த்து அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிக் கொள்வதால் மக்களுக்கு என்ன பயன், இது சட்டப்பேரவையா இல்லை சண்டை பேரவையா?

பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நடவடிக்கைகள் அமைதியாக போகின்றன. அவர் பேசினால்தான் சண்டை ஏற்படுகிறது. எனவே அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள்" என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆதவ் அர்ஜுனா, அண்ணியார் என குறிப்பிட்டு, இந்த சட்டசபையில் மறைந்த விஜயகாந்த் எப்படி குரல் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கும் போது மட்டுமே நாங்கள் பேசுகிறோம்.

நல்ல கருத்துகள் கூறினால் ஏற்கிறோம். போலி பிரச்சாரத்தை முன் வைத்தால் அதற்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது என்றார்.

உடனே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஆக்கப்பூர்வமாக எந்த விவாதமும் நடைபெறுவதாக தெரியவில்லை. மாறாக காரசாரமாக மட்டுமே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

10 மணி நேரம் பேரவை நடந்தது என கூறினீர்கள், ஆனால் அதில் எத்தனை மணி நேரம் பயனுளள வகையில் இருந்தது என்பதை கூற வேண்டும். நேரத்தை விரயமாக்கும் எந்த விஷயத்தையும் பேச எவரையும் அனுமதிக்க வேண்டாம் என்றார்.

இதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், "தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 15 பேர் பேசியிருக்க வேண்டும். ஆனால் 2 பேர் மட்டுமே பேசினார்கள். சட்டசபைக்குள் 12 மணி முதலம் 2.30 மணி வரை சண்டையிலேயே சென்றது.

அமைச்சர் ஆதவ்விடம் நேரடியாகவே நான் சொல்லிவிட்டேன்,. "தம்பி அவை அமைதியாக சென்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எழுந்து பேசினால்தான் சண்டை வருகிறது. அதனால் நீங்கள் பேசாதீர்கள்" என சொல்லிவிட்டேன் என்றார்.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிக்காக முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+