Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murasu : தேமுதிகவுக்கு சின்னமே ஒதுக்கவில்லை! விஜயகாந்த் கொட்டிய முரசு எங்கே? பிரேமலதா ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும். இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.

Vijayakanth Murasu

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த், தேமுதிக எனும் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களமிறங்கியது. அப்போது விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தார். இதையடுத்து 2016ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிக தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றத் தேர்தல்

இதையடுத்து 2019, 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பிரேமலதா இந்த முறை யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில் முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்ததன் மூலம் திமுகவுடன் கூட்டணி என அறிவித்தார்.

வெறும் 0.4%

கடந்த 2006ஆம் ஆண்டு 10,000-த்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற தேமுதிக, தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்க் கொண்டு அரசியல் செய்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 0.4 சதவீதம் ஆகும். கடந்த 15 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலை இருந்தது.

இத்தனை தோல்விகளுக்கு அடுத்து பிரேமலதா கூட்டணி கண்ணாமூச்சி ஆடி, பின்னர் திமுகவுடன் இணைந்துள்ளார். இந்த நிலையில் தேமுதிக கடந்த காலங்களில் பெற்ற வாக்கு சதவீதங்களை பார்க்கலாம்.

வாக்கு சதவீதம்

2006 சட்டமன்றத் தேர்தல் (தனித்து போட்டி, 234 தொகுதிகள்): 8.38% வாக்குகள். வெற்றி: 1 இடம் (விருத்தாசலம் - விஜயகாந்த்). இது தேமுதிகவின் உச்சகட்டம்; மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்தது.

2011 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 41 தொகுதிகள்): 7.88% வாக்குகள். வெற்றி: 29 இடங்கள். எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தார்.

2016 சட்டமன்றத் தேர்தல் (மக்கள் முன்னணி கூட்டணி, 104 தொகுதிகள்): 2.39% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். பெரும் சரிவு ஏற்பட்டது.

2021 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 60 தொகுதிகள்): 0.43% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். வாக்கு வங்கி மிகவும் குறைந்தது.

மக்களவைத் தேர்தல்களில் (Lok Sabha) சில குறிப்புகள்

2009: சுமார் 10% (தனித்து).
2019: DMDK-வுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளில் 2.15% (கூட்டணியில்).
2024: DMDK கூட்டணியில் சில இடங்களில் 2-3% வரை (ஒட்டுமொத்தமாக குறைவு).

வாக்கு சதவீதம்

தேமுதிகவின் வாக்கு சதவீதம் விஜயகாந்த் இருந்த காலத்தில் (2006-2011) 7-8% அளவில் வலுவாக இருந்தது. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு (2016 முதல்) கட்சி பலவீனமடைந்து, 0.4-2.5% அளவுக்கு சரிந்துள்ளது. கூட்டணிகளால் சில இடங்களில் வாக்குகள் அதிகரித்தாலும், தனித்து போட்டியிட்டால் இப்போது மிகக் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. முரசு சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம், தவெக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படாததால் தனி சின்னத்தில் போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தனி சின்னம்

தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக ஒப்புக் கொள்ளாது. எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்ட போது, "உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவா நாங்கள் கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம்? தனி சின்னத்தில் போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டுவோம். அப்படி போட்டியிட்டால்தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது." என தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+