பிரேமலதா விஜயகாந்த் கையை பாருங்க.. புதுசா என்ன அது.. அடடே நெகிழ்ச்சி!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கையில் போட்டிருக்கும் டாட்டூ, அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறுதி அஞ்சலி நிகழ்வில் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பிரபலங்கள் பலரும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தனது கணவர் விஜயகாந்த் என்றும் மறையாமல் தன்னுடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த் அவரது நினைவிடம் ஒரு கோவிலை போல் பராமரிக்கப்படும் என்றார். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க உள்ளதாகவும் பிரேமலதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மறைந்த விஜயகாந்த் நினைவாக அவரது உருவத்தை பிரேமலதா தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த்தின் உருவத்தை தன்னுடைய வலது கையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா டாட்டூவாக வரைந்து கொண்டுள்ளார். விஜயகாந்த் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் தனது கையில் டாட்டூவாக வரைந்துள்ளார் பிரேமலதா. இந்த டாட்டூவை டாட்டூ கலைஞர் ரிஞ்சென் வரைந்துள்ளார்.
பிரேமலதா குத்தியுள்ள டாட்டூவில் விஜயகாந்த் சிரித்தபடி இருக்கிறார். தங்கள் அன்புக்குரியவர்களின் உருவத்தை டாட்டூவாக வரைந்து கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ள நிலையில், பிரேமலதா, விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அதனைச் செய்துள்ளார். பிரேமலதா, விஜயகாந்த் உருவத்தை டாட்டூவாக போட்டுக்கொள்ளும் வீடியோ, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications